Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

இரண்டாம் உலகப் போருக்கு பின்னார் வராலாறு காணாத பெரும் துயரையும் ,நெருக்கடியையும் சுமந்து நிற்கின்ற ஜப்பானிய தேசத்துக்கு, தமிழ் மக்களுடைய ஆழ்ந்த கவலையும், அக்கறையும் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் விசுவநாதன் உருத்திரகுமாரன் அவர்கள் தெரிவித்துள்ளார்.

அமெரிக்கா, நியூயோர்க் நகரில் அமைந்துள்ள ஐக்கிய நாடுகள் சபைக்கான, ஜப்பானின் உயர்காரியாலயத்துக்கு (மார்ச் 14 திங்கட்கிழமை) சென்ற பிரதமர் விசுவநாதன் உருத்திரகுமாரன் அவர்கள், ஜப்பானிய பிரதமருக்கு கிடைக்கும் வகையில் மனு ஒன்றை கையளித்துள்ளார்.

ஜப்பானில் ஏற்பட்டுள்ள நிலநடுக்கம் மற்றும் ஆழிப்பேரலை அனர்த்தங்களினால் பாதிக்கப்பட்டுள்ள ஜப்பானிய மக்களின் துன்ப, துயரங்களில் தமிழீழ மக்களும் பங்கெடுப்பதாகவும், இத்தகைய பெருந்துயரில் இருந்து ஜப்பானிய மக்கள் மீண்டு எழுந்து வருவார்கள் என தனக்கு நம்பிக்கை இருப்பதாகவும் அந்த மனுவில் பிரதமர் விசுவநாதன் உருத்திரகுமாரன் அவர்கள் குறிப்பிட்டுள்ளார்.

0 Responses to ஐநாவுக்கான ஜப்பானிய உயர்காரியாலத்தில் விசுவநாதன் உருத்திரகுமாரன் மனு கையளிப்பு

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com