Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

இந்திய அரசால் கொடுக்கப்பட்ட 2 பரிமானத் தோற்றத்தைக் கொண்ட ராடர்கள் 24 மணி நெரமும் வேலைசெய்யும்போது, குறைந்தது ஒவ்வொரு 8 மணித்தியாலத்தின் பின்னர் சிறிது நேரம் வேலைசெய்யாமல் போவது வழமையாக இருந்திருக்கிறது. இருப்பினும் அதனை இலங்கை பாவித்து வந்துள்ளது. இந் நிலையில் 2007ம் ஆண்டு புலிகளின் வான்படை கொழும்பு கட்டநாயக்கா விமானநிலையத்துக்கு மேலாகப் பறந்து குண்டு வீச்சில் ஈடுபட்டது. இதனால் இந்தியாவிடம் இருந்து குத்தகைக்குப் பெற்றிருந்த தாக்குதல் உலங்கு வானூர்திகள் உட்பட பல விமானங்கள் சேதத்திற்கு உள்ளாகின.

அப்போது இலங்கை அரசானது தமக்கு எந்தச் சேதங்களும் ஏற்படவில்லை எனவும் புலிகள் வீசிய குண்டுகள் ஓடுபாதையில் வீழ்ந்ததாகவும் தெரிவித்து தப்பியது. ஆனால் விக்கி லீக்ஸ் இது குறித்த தகவலை வெளியிட்டு, இலங்கை அரசின் மூக்கை உடைத்துள்ளது. அதுமட்டுமல்லாது, இந்தியா கொடுத்த ராடர்கள் ஒவ்வொரு 8 மணித்தியாலத்துக்கும் ஒரு முறை குறிப்பிட்ட சில நிமிடநேரங்கள் செயல் இழக்குமாம், அந்த சில நிமிட நேரம் எது என்பதை வான் புலிகள் மிகத் துல்லியமாக தெரிந்துவைத்திருக்கின்றனர். அதனால் தாம் வன்னியில் இருந்து புறப்படும், நேரம் தென்னிலங்கையில் தாம் தாக்கும் இடம், என்பனவற்றை மிக மிகத் துல்லியமக அவர் கணித்தே செயல்பட்டுள்ளனர்.

வன்னியில் இருந்து புலிகளின் விமான பறப்பில் ஈடுபட்ட சில வினாடிகளில், வன்னி தளத்தில் உள்ள இலங்கை ராடர் அதனைக் கண்டு பிடித்துவிடும். ஆனால் அவர்கள் கொழும்புக்கு வரும்நேரம், கொழும்பு ராடர் செயலியழக்கும் நேரமாக இருக்குமாம். அதனால் ராடர் இருந்தும் அதனை பாவிக்கமுடியாத நிலையும், மற்றும் அது வேலைசெய்தாலும், புலிகளின் விமானங்கள் பறப்பை அது கண்டு பிடிக்காது என்ற உண்மை பின்னரே இலங்கை அரசால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அதாவது புலிகள் இந்தியா கொடுத்த ராடர்களின் செயல்பாட்டை நன்கு அறிந்துவைத்திருந்ததோடு, அது 8 மணித்தியாலத்துக்கு ஒருமுறை இப்படிக் காலைவாரும் என்று வேவுபார்த்து தெரிந்தும் வைத்திருந்தும் உள்ளனர்.

இதனை மிகத் தாமதமாக அறிந்த கோத்தபாய, தாம் பல காலமாக முப்பரிமான ராடர்களை இந்தியாவிடம் இருந்து கோரிவருவதாகவும் அதனை அவர்கள் தரவில்லை என்று அமரிக்க தூதுவர் ரொபேட் பிளேக்கிடம் குறைப்பட்டுள்ளார். சும்மா இருப்பாரா ரொபேட் பிளேக், உடனே பாதுகாப்பு தொலைத் தொடர்பு ஊடாக இச் செய்திகளை தமது கட்டளைப் பீடத்துக்கு ஏப்பிரல் 2007ம் ஆண்டு அனுப்பிவைத்துள்ளார். அதனை விக்கி லீக்ஸ் கைப்பற்றி தற்போது வெளியிட்டுள்ளது. இதில் கோத்தபாய அமெரிக்காவைச் சேர்ந்த் நிபுனர் குழு ஒன்று இலங்கை வந்து புலிகளின் விமானத் தாக்குதலை எவ்வாறு சமாளிப்பது என்பது குறித்து படையினருக்கு உதவிகளை வழங்கவேண்டும் எனவும் கோரியுள்ளார் என்ற தகவலும் அம்பலமாகியுள்ளது.

இறுதியாக சீனாவிடம் இருந்து முப்பரிமாண ராடர்களை பெரும் விலைகொடுத்து இலங்கை அரசு வாங்கி அதனைப் பொருத்தி உள்ளது. இருப்பினும் இரவில் வரும் புலிகளின் விமானங்களை அது கண்டு பிடித்தாலும், விமானத்தைத் தாக்கும் துப்பாக்கிகளை இயக்கும் ராடர் வசதிகளை அதுகொண்டிருக்கவில்லை எனவும், அதனால், புலிகளின் விமானம் பறப்பில் ஈடுபடும்போது வாண்பரப்பு முழுவதும் கண்மூடித்தனமாக இலங்கைப் படையினர் சுட்டுத் தள்ளியதாகவும் அதில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது. எது எவ்வாறு இருந்தாலும் அமெரிக்கா, சீனா, இந்தியா, மற்றும் பாக்கிஸ்தான் போன்ற நாடுகளின் நேரடித் தலையீட்டில் இலங்கை அரசு புலிகளுடனான போரில் வென்றுள்ளது என்பது புலனாகிறது. ஆனால் அதனைக் கருத்தில் கொள்ளாது, தாம் புலிகளைப் போரில் வெண்றதாக அது பிதற்றுவது அர்த்தமற்றது.

அதிர்வு

0 Responses to காலை வாரும் ராடரும் அதனக் கண்டுபிடித்த விடுதலைப் புலிகளும்: ஒரு ரிப்போட்!

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com