Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

உலகளாவிய ரீதியில் மீண்டும் நீதிவேண்டி, உரிமைவேண்டி தமிழர் நடாத்தும் மாபெரும் கறுப்பு யூலை நிகழ்வு சனிக்கிழமை, யூலை 23ஆம் நாள் 2011 மாலை 5 மணிக்கு ஒன்ராரியோ பாராளுமன்றம் (Queen's Park) முன்றலில் நடைபெறவுள்ளது. இந்நினைவுவணக்க நிகழ்வு கனடியத் தமிழர் தேசிய அவையால் ஒழுங்குசெய்யப்பட்டுள்ளது. இந்நிகழ்வில் அனைத்துத் தமிழ் உறவுகளையும் கலந்துகொள்ளுமாறு கனடியத் தமிழர் தேசிய அவை அழைப்பு விடுக்கின்றது.

28 ஆண்டுகளுக்கு முன்னர் யூலையில் ஆரம்பித்த தமிழினப்படுகொலை இன்று 27 ஆண்டுகள் கடந்தும் தொடர்கின்றது. ஈழத்தமிழினம் தொடர்ந்தும் இனப்படுகொலைக்குள்ளாகி வருகின்றது. தனது பொறுப்பில் இருந்து தவறி நிற்கும் சர்வதேசத்தை அதன் மனிதநேயக் கடமைகளை ஆற்ற வைக்க நாம் தொடர்ந்தும் கடுமையாக உழைக்க வேண்டும். இது நாம் துவண்டு கிடக்கும் நேரமல்ல விவேகத்துடன் விரைந்து செயற்படும் காலம் என அறைகூவல் விடுக்கப்பட்டுள்ளது.

எம் மக்களை பயங்கரவாதிகள் என முத்திரை குத்தி இனப்படுகொலை செய்துவரும் சிங்கள ஆட்சியாளர்கள் தற்போது உயிரைக் காக்க தப்பிவரும் தமிழர்களையும் பயங்கரவாதிகள் என முத்திரைகுத்தி சர்வதேச ரீதியாக தமிழர்களை தனிமைப்படுத்த முயன்று நிற்கின்றது. இந்நிலையில் எமது ஒன்றுபட்ட எழுச்சியும், காலத்தின் தேவைகருதிய விரைந்த செயற்பாடுகளும் எம் மக்களின் நிலையை வெளிக்கொண்டு வருவதும் அவசியம் என மேலும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இவ்வகையில் போர்குற்றங்கள் குறித்து சிறீலங்கா மீது சுயாதீனமான சர்வதேச விசாரணை மேலும் தாமதமின்றி உடன் நடாத்தப்பட வேண்டும். போர்க்கைதிகள் அனைவரும் உடனடியாக சர்வதேச கண்காணிப்பில் கொண்டுவரப்பட வேண்டும், போர்க்கைதிகள் நிபந்தனையின்றி விடுவிக்கப்படவேண்டும். மனித உரிமைகளை சிறீலங்கா மதிக்கும் வரை, இராஐதந்திர, பொருளாதாரத் தடைகளை விதிக்க வேண்டும் ஆகிய கோரிக்கைகளை முன்வைத்து மாபெரும் ஓன்றுகூடல் கனடியத் தமிழர் தேசிய அவையால் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது.

இலட்சியத்தில் ஓர்மம் கொண்டு ஒன்றுபட்டு உறுதிகொண்ட மக்களே வரலாறு படைப்பார்கள்.

வாருங்கள், வரலாறாக வாருங்கள்.
ஒன்றாய் இணைந்து வரலாறு படைப்போம்.
எங்களுக்காக, எங்கள் சொந்தங்களுக்காக வாருங்கள்.
கறுப்பு யூலை ஒன்றுகூடல்



இடம்: ஒன்ராரியோ பாராளுமன்றம் (Queen's Park)

காலம்: யூலை 23, சனிக்கிழமை

நேரம்: மாலை: 5:00 மணி

தொடர்புகளுக்கு: கனடியத் தமிழர் தேசிய அவை (NCCT)

பணிமனை: 5310 Finch Ave East, Unit 10

தொலைபேசி: 1 866 263 8622 -416 646 7624

மின்னஞ்சல்: info@ncctcanada.ca

இணையத்தளம்: www.ncctcanada.ca

0 Responses to கனடா குயின்ஸ் பார்க் திடலில் யூலை 23, மாபெரும் கறுப்பு யூலை நினைவு ஒன்றுகூடல்

Post a Comment

Followers

அதிகமாக வாசிக்கபட்டவை...

தொடர்புக்கு: vannionline@gmail.com