இனப்படுகொலைக் குற்றவாளி ராஜபக்சே கும்பலை அனைத்துலக நீதிமன்றம் தண்டிக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் முன்னெடுக்கும் நடவடிக்கைகளுக்கு ஆதரவாக விடுதலைச் சிறுத்தைகளின் மாபெரும் கெயொப்ப இயக்கம் தொடங்கும் நிகழ்ச்சி 12.07.2011 அன்று சென்னையில் தொடங்கியது. இதனை விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் தொடங்கி வைத்தார்.
அப்போது செய்தியாளர்களிடம் பேசிய திருமாவளவன்:
சனல் 4 தொலைக்காட்சி வெளியிட்ட இலங்கை கொலை களம் என்கிற குறுங்தகடுகளை கிராமம் கிராமமாக மக்களிடம் ஒளிபரப்பி கையெழுத்து இயக்கத்தை நடத்த இருக்கிறோம்.
விடுதலைச் சிறுத்தைகள் நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தை ஆதரிக்கிறது. அது முன்னெடுக்கிற முயற்சிகளுக்கு சர்வதேச அளவில் ஒத்துழைப்பு நல்க முடிவு எடுத்திருக்கிறது. ஈழத்தில் மறுவாழ்வு பணிகள் முறையாக நடப்பது இல்லை. இந்திய அரசு அளித்த உதவித் தொகை முறையாக மக்களுக்கு செலவு செய்யப்படவில்லை.
வன்னிப் பகுதி முழுவதும் சிங்கள மயமாக்கப்பட்டு வருகிறது. நிலையான ராணுவ முகாம்கள் அமைக்கப்பட்டு வருகின்றன. திட்டமிட்ட கலாச்சார சீரழிவு நடத்தப்பட்டு வருகிறது. புலிகள் என்கிற பெயரால் 11 ஆயிரம் பேர் சிறைகளில் அடைக்கப்பட்டுள்ளனர். திருமணக்கூடங்களில், தனியார் இடங்களில் அடைத்து வைக்கப்பட்டிருக்கிறார்கள். வதைசெய்யப்படுகிறார்கள்.
சிங்கள ராணுவத்தினால் தமிழ் பெண்கள், பாலியல் கொடுமைக்கு உட்படுத்தப்படுகிறார்கள். இதையெல்லாம் சர்வதேச சமூகம் வேடிக்கை பார்த்து வருகிறது. குறிப்பாக இந்திய அரசு இதை அனுமதித்துக்கொண்டிருக்கிறது. இந்திய அரசின் இந்தப் போக்கை விடுதலைச் சிறுத்தைகள் வன்மையாக கண்டிக்கிறது என்றார்.
சனல் 4 தொலைக்காட்சி வெளியிட்ட வீடியோவை கிராமம் கிராமமாக ஒளிபரப்புவோம்: திருமா
பதிந்தவர்:
Anonymous
12 July 2011



இளமாறன் தமிழ்நாடு
விடுதலைச் சிறுத்தைகள் நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தை ஆதரிக்கிறது என்று திருமா அவர்கள் அறிவித்து, ஐ.நா வுக்கு அளிக்கவிருக்கும் கையெழுத்து இயக்கம் நடத்தி வருகிறது. தமி்ழ் உணர்வாளர்கள், ஈழ ஆதரவாளர்கள் சார்பாக எனது வாழ்த்துக்களையும் நன்றிகளையும் தெரிவித்து கொள்ளும் இவ்வேளையில், நாம் தமிழர், பா ம க , மதிமுக, கம்யூனிஸ்ட் கட்சிகள், மற்றும் மற்ற ஈழ ஆதரவு கட்சிகள் நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தை பங்கிரமாக ஆதரிக்க முன் வர வேண்டும்.