Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

பெட்ரோல், டீசல், சமையல் கியாஸ் விலை உயர்வை எதிர்த்து லட்சிய தி.மு.க. சார்பில் சைதாப்பேட்டை பனகல் மாளிகை எதிரில் இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.

லட்சிய தி.மு.க. தலைவர் டி. ராஜேந்தர் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டு விலை உயர்வுக்கு எதிராக கண்டன கோஷங்கள் எழுப்பினார். ஆர்ப்பாட்டத்தில் டி. ராஜேந்தர் பேசியதாவது:

மத்திய அரசு பெட்ரோல், டீசல், சமையல் கியாஸ் விலைகளை உயர்த்தி வருவதால் ஏழை, நடுத்தர மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். இலங்கைக்கு மத்திய அரசுதான் பெட்ரோல் ஏற்றுமதி செய்கிறது. ஆனால் இலங்கையில் பெட்ரோல் விலை லிட்டருக்கு 50 ரூபாய். ஆனால் இங்கு லிட்டருக்கு 67 ரூபாய் கட்டணம் நிர்ணயித்துள்ளனர்.

பாகிஸ்தானில் ஒரு லிட்டர் பெட்ரோல் 45 ரூபாய், பணக்கார நாடான அமெரிக்காவில் 50 ரூபாய், நமது நாட்டில்தான் அநியாயத்துக்கு விலை ஏற்றி உள்ளனர். பெட்ரோல், டீசல், சமையல் கியாஸ் விலை உயர்வை ரத்து செய்யவேண்டும். இலங்கைக்கு பெட்ரோல் ஏற்றுமதி செய்வதை நிறுத்த வேண்டும். இலங்கைக்கு பொருளாதார தடை விதிக்க வேண்டும் என்ற தமிழக அரசு தீர்மானத்தை மத்திய அரசு நிறைவேற்ற வேண்டும் என்றார்.

0 Responses to இலங்கை மீது பொருளாதாரத் தடை: மத்திய அரசு நிறைவேற்ற வேண்டும்: டி. ராஜேந்தர்

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com