Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

எதிர்வரும் 18ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள பொதுநலவாய நாடுகளின் பாராளுமன்றக் குழுக் கூட்டத்தில் பங்கேற்க மகிந்தரின் சகோதரரும் இலங்கை பாராளுமன்ற சபாநாயகருமான சமல் ராஜபக்ஷ பிரித்தானியா வருகிறார். இவர் வரும் 17ம் திகதி லண்டன் ஹீத்ரூ விமானநிலையத்தில் டேர்மினல் 4 ஊடாக லண்டன் வர இருப்பதாக செய்திகள் கசிந்துள்ளது.

இவருடன் எதிர்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க, தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் ஆகியோரும் உடன் வர இருப்பதாக கொழும்பில் இருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன. கடந்த வருடம் மகிந்த ராஜபக்ஷ பிரித்தானியா வந்தபோது தமிழர்கள் எவ்வாறு வரவேற்றார்கள் என்பது ஊரறிந்த விடையம்.

இம் முறை அவர் குடும்ப அங்கத்தவரும் இலங்கை சபாநாயகருமான சமல் வருகிறார். இதற்கு பிரித்தானியத் தமிழர்கள் எவ்வகையான எதிர்வினைகளைத் தோற்றுவிக்கப்போகிறார்கள் என்று தெரியவில்லை. பொதுநலவாய நாடுகளின் பாராளுமன்றக் கூட்டத்தொடரில் கலந்துகொள்ள வரும் சமல் ராஜபக்ஷ பிரித்தானியாவில் பல அரசியல் தலைவர்களைச் சந்திக்கவும் உள்ளார். இதற்கான முன் ஏற்பாடுகள் சமீபத்தில் இலங்கை சென்று திரும்பிய லியாம் பொஃக்ஸ் ஊடாக நடைபெற்றுள்ளதாக ஊர்ஜிதமற்ற தகவல்கள் தெரிவிக்கின்றன.

சமல் ராஜபக்ஷ பிரித்தானியா வந்து சுலபமாக அனைத்து இடங்களுக்கும் சென்று தனது அரசியல் வேலைத் திட்டங்களை நிறைவேற்ற ஏதுவாக, சில சக்திகள் செயல்பட்டு வருவதாகவும், அதனூடாக அவருக்கு எதிராகத் தமிழர்கள் போராடம் எதனையும் நடத்தாமல் இருக்க இச் சக்திகள் முயற்சிப்பதாகவும் மேலும் அறியப்படுகிறது.

அதிர்வு

0 Responses to மகிந்தரின் சகோதரர் லண்டன் வருகிறார்: வரவேற்ப்பு எப்படி இருக்கப்போகிறது?

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com