“இந்தோனேஷியா அரசால் கைது செய்யப்பட்டுள்ள 89 ஈழத்தமிழர்களை காப்பாற்றுங்கள்’ என பிரதமருக்கு, வைகோ கடிதம் எழுதியுள்ளார். பிரதமருக்கு, ம.தி.மு.க., பொதுச் செயலர் வைகோ அனுப்பிய கடிதத்தில் கூறியிருப்பதாவது: நெருங்கிய உறவினர்களை சிங்கள ராணுவம் கைது செய்து விசாரணைக்கு அழைத்துச் சென்று, அவர்கள் உயிரோடு இருக்கின்றனரா என்று தெரியாமல், 89 ஈழத்தமிழர்கள் அகதிகளாக தஞ்சம் புக, கப்பல் மூலம் நியூசிலாந்துக்கு பயணம் செய்தனர்.
இந்தோனேஷியா கடல் படை, அவர்களை தடுத்து கைது செய்து, இலங்கைக்கு திருப்பி அனுப்ப முயற்சிக்கிறது. அவர்கள் சட்ட விரோதமாகக் குடியேற வரவில்லை. பன்னாட்டு சட்டத்தின் கீழ், அகதிகளாக தஞ்சம் கேட்கும் <உரிமையை, இந்தோனேஷியா அரசு தடுக்க முடியாது. அரசின் செயலுக்கு எதிர்ப்பு தெரிவித்து, 89 அப்பாவித் தமிழர்களும் கப்பலை விட்டு இறங்க மாட்டோம் என போராடி வருகின்றனர். இந்திய அரசு, இந்தோனேஷியா அரசுக்கு அழுத்தம் கொடுத்து, ஈழத்தமிழர்கள் பயணம் தொடர வகை செய்ய வேண்டும். இவ்வாறு வைகோ தெரிவித்துள்ளார்.



0 Responses to ஈழத்தமிழர்களை காப்பாற்ற பிரதமருக்கு வைகோ கடிதம்