Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

தமிழர் விளையாட்டுத்துறை பிரான்சு வருடம் தோறும் நடாத்தி வரும் மாவீரர் நினைவு சுமந்த மெய்வல்லுனர்கள் போட்டியின் 18 வதின் இறுதிப்போட்டி 17.07.2011 அன்று பாரிசில் அமைந்துள்ள STADE JULES LADOUMEGUES ( Porte de Pantin )மைதானத்தில் நடைபெற்றிருந்தன.

இந்த வருடத்தின் தொடக்கத்தில் இருந்து ஆரம்பிக்கப்பட்ட போட்டிகள் 16.07.2011.ல் தெரிவுப்போட்டியாகவும் 17.07.2011ல் இறுதிப்போட்டியாகவும் நடைபெற்றிருந்தன.

16ம் திகதி தெரிவுப்போட்டியின் தொடக்க நிகழ்வாக ஈகைச்சுடர் ஏற்றலினை தனது இரண்டு சகோதரர்களை மாவீரர்களாகவும், மற்றொரு சகோதரரை நாட்டுப்பற்றாளராகவும் தாய்மண்ணுக்கு கொடுத்த திரு. அலெக்ஸ் அவர்கள் ஏற்றிவைத்து அகவணக்கத்துடன்.

போட்டிகள் ஆரம்பித்து வைக்கப்பட்டன. அன்றைய போட்டிகள் மிகவும் விறுவிறுப்பாகவும், சிறப்பாகவும் நடைபெற்றன. காலநிலை மாற்றத்தால் அவ்வப்போது மழை பெய்தபோதும் வீரவீராங்கனைகள் உற்சாகமாக போட்டிகளில் ஈடுபட்டனர். இறுதிப்போட்டி நாளான 17.07.2011 ஞாயிற்றுக்கிழமை காலை 9.30 மணிக்கு மாவீரர்களின் நினைவுடன் பொதுச்சுடரினை தமிழர் ஒருங்கிணைப்புக்குழு தலைவர் திரு. வெ. அ. யோசேப் அவர்கள் ஏற்றிவைத்தார். அதனைத் தொடர்ந்து பிரெஞ்சு தேசியக் கொடியினை 91 பகுதி முதல்வரின் பிரதம ஆலோசகரும், தமிழீழ மக்களின் நண்பருமாகிய மதிப்புக்குரிய டேவிட் பயறோன் அவர்கள் ஏற்றி வைக்க, தமிழீழ தேசியக் கொடியை விளையாட்டுத்துறைப் பொறுப்பாளர் திரு. சுதர்சன் அவர்கள் ஏற்றி வைத்தார்.


ஈகைச்சுடர் ஏற்றலினை தாயக விடுதலைக்காகத் தம் இன்னுயிரை ஈகம் செய்த மேஐர் வாமன், கப்ரன் நகுலன் ஆகிய இரண்டு மாவீரர்களை ஈன்றளித்த அன்னையும், தமிழீழ தேசிய மாவீரர் நினைவாக நடாத்தப்படும் விளையாட்டுப் போட்டியின் பிரதம அழைப்பாளராக வருகை தந்திருந்தவருமாகிய மதிப்புக்குரிய மு. சோதிநாயகி அவர்கள் ஏற்றி வைத்தார்கள். தாயக விடுதலைப்போரில் முதற்களப்பலியான மாவீரர் சங்கர் அவர்களுடைய படத்திற்கும், மாவீரர்கள் நினைவுப்பொதுப்படத்திற்கும் மலர் மாலையை மாவீரர்களின் மற்றைய சகோதரர் மலர் மாலை அணிந்து மலர் வணக்கம் செய்யப்பட்டது. அகவணக்கம் வணக்கம் செலுத்தபட்டு அனைத்து கழகங்களின் கொடியேற்றம் கழகப் பிரதிநிதிகளால் ஏற்றி வைக்கப்பட்டன.

வீரர்களின் வெற்றிச்சுடர் ஏற்றல் இடம் பெற்றன. வெற்றிச்சுடர் ஏற்றுதலை அன்றைய போட்டி முகாமையாளர் திரு. இ. இராஐலிங்கம் அவர்கள் தொடக்கி வைக்க கடந்த வருடம் 22 வயதிற்கு மேற்ப்பட்ட பிரிவில், சிறந்த வீரன் ரஐPவன் ரஞ்சித்குமார் அவர்களுடன் சிறந்த வீராங்கனையான திருமதி. கமலினி சுNஐந்திரன் ஆகியோர் வெற்றிச்சுடரினை பெற்று ஏனைய வீரர்களிடம் கொண்டு சென்று கையளித்தனர்.

மைதானத்தை சுற்றி வந்த வெற்றிச்சுடர் முடிவில் ஒலிம்பிக் தீபத்தில் ஏற்றி வைக்கப்பட்டது. வீரர்களுக்கான சத்தியப்பிரமாணம் வெற்றிச்சுடர் ஏற்றிய வீரர்கள் செய்ய நடுநிலையாளர்களுக்கான சத்தியப்பிரமாணத்தை நடுவர்களில் ஒருவரான திரு. க. அகிலன் செய்திருந்தார். அன்றைய பிரதம விருந்தினர் போட்டியை ஆரம்பித்து வைத்திருந்தார்.

சிறப்பு அழைப்பாளராக பாரிசு 19 உதவி முதல்வர் திரு.BERNARD JOMIER Maire Adjoint (Paris 19ème)அவர்களும் கலந்து கொண்டு சிறப்பித்திருந்தார்.
சிறுவர்களுக்கான 50 மீற்றர் ஓட்டத்திலிருந்து 3000 மீற்றர் ஓட்டம் வரை சகல விளையாட்டுக்களின் இறுதித் தெரிவுப் போட்டிகளும் நடைபெற்றன. போட்டிகளின் நடுவே வீரர்களுக்கான சான்றிதழ்களும், பதக்கங்களும் வழங்கப்பட்டன.

வீரர்களை உற்சாகப்படுத்தும் வகையில் வட்டுக்கோட்டை விளையாட்டுக்கலைஞர்கள் இசைப்பேரொலி எழுப்பி சிறப்பித்தனர். பி.பகலில் மாவீரர் நினைவு சுமந்த உதைபந்தாட்ட சுற்றில் இறுதியாக தெரிவு செய்யப்பட்ட ஈழவர் விளையாட்டுக்கழகமும், தமிழர் விளையாட்டுக்கழகம் 93ம் களத்தில் இறங்கியிருந்தன. விறுவிறுப்பாக நடைபெற்ற போட்டியில் ஈழவர் விளையாட்டுக்கழகம் 3-1 என்ற ரீதியல் வெற்றியீட்டியது.
மாவீரர் நினைவு சுமந்தமெய்வல்லுனர் போட்டியில் தமிழர் விளையாட்டுக் கழகம் - 93 முதலாவது இடத்தையும், நல்லூர் ஸ்தான் விளையாட்டுக் கழகம் இரண்டாவது இடத்தையும், வட்டுக்கோட்டை விளையாட்டுக் கழகம் மூன்றாவது இடத்தையும் பெற்றுக்கொண்டன.

பரிசளிப்பு நிகழ்வுகள் நடைபெற ஏற்பாடாகிய வேளை உரை இடம் பெற்றது. எம் உயிரோடும், உதிரத்தோடும் கலந்து விட்டவர்கள் மாவீரர்கள், அவர்கள் எமது இதயக்கோயிலிலே வைத்து வழிபடுபவர்கள் இவர்களின் நினைவாக நடாத்தப்படுகின்ற அனைத்து விடயங்களிலும் எமது மக்கள் கலந்து சிறப்பிக்க வேண்டியது மானமுள்ள, வீரமுள்ள ஒவ்வொரு தமிழனுடைய வரலாற்றுக் கடமையாகும், ஒரு சாரார் விளையாட்டுக்கு என்றும், இன்னொரு சரார் ஆடல், பாடல் கலை நிகழ்வுக்கு என்றும், மற்றொரு சரார் அரசியல் என்றும் இல்லாமல் எல்லா தமிழ் மக்களும் தமிழீழ தேசம் நோக்கிய அனைத்து நிகழ்வுகளிலும் கலந்து கொண்டு வலிமையையும், பெருமையும், ஒற்றுமையுள்ளவர்கள் என்பதை இவ்வாறுதான் காட்ட வேண்டும் என்றும் தமிழர் ஒருங்கிணைப்புக்குழுவின் சார்பில் பரப்புரைப் பொறுப்பாளர் தெரிவித்திருந்தார்.

அனைத்து வீர வீராங்கனைகளுக்கு பதக்கங்களும், சான்றிதழ்களும், வெற்றிக்கிண்ணங்களும் வழங்கி மதிப்பளிக்கப்பட்டனர். மாலை 7.00 மணியளவில் கழகங்களின் கொடிகளும், தமிழீழ தேசியக்கொடியும், பிரெஞ்சுக்கொடிகளும் இறக்கப்பட்டு நம்புங்கள் தமிழீழம் பிறக்கும் பாடலுடன் தமிழரின் தாகம் தமிழீழத்தாயகம் என்னும் தரக உறுதி மொழியுடன் போட்டிகள் யாவும் நிறைவு பெற்றன.




0 Responses to பிரான்சில் தமிழீழ தேசிய மாவீரர் நினைவு சுமந்த இறுதிப் போட்டிகள் (படங்கள் இணைப்பு)

Post a Comment

Followers

அதிகமாக வாசிக்கபட்டவை...

தொடர்புக்கு: vannionline@gmail.com