Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

இன்று 31.07.2011 நடைபெறும் உச்சிதனை முகர்ந்தால் இசைவெளியீட்டு விழா நிகழ்ச்சியின் கலைஞர்கள் லண்டன் வந்தனர். ஈழத்தில் நடந்த உண்மைச் சம்பவம் ஒன்றை உச்சிதனை முகர்ந்தால் என்னும் படமாக ஆக்கியுள்ளனர்.

உணர்வாளர் புகழேந்தி இப் படத்தை இயக்கியுள்ளார். புலம்பெயர் தமிழர்களால் நிதியுதவி செய்யப்பட்டு இத்திரைப்படம் எடுக்கப்பட்டுள்ளது.

இத் திரைப்படத்தில் நடிகர் சத்தியராஜ், மணிவண்னன், நாசர் மற்றும் சங்கீதா ஆகியோர் நடித்துள்ளனர்.

13 வயது ஈழப் பெண்ணை இலங்கை இராணுவம் கற்பழித்த உண்மைக் கதை தத்துரூபமாகப் படமாக்கப்பட்டுள்ளது.

இத் திரைப்படத்தில் பல நடிகர்கள் சம்பளம் இன்றி நடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந் நிலையில் அதன் வெளியீட்டு விழா இன்று (31.07.2011) லண்டனில் நடைபெறவுள்ளது. இவ்விழாவில் கலந்துகொள்ளவுள்ள கலைஞர்கள் தற்போது லண்டன் வந்துள்ளனர்.

பிரபல பின்னணி இசைப்பாடகர் கிரிஷ், அவரின் மனைவியும் நடிகையுமான சங்கீதா, இசை அமைப்பாளர் இம்மான், மற்றும் இயக்குனர் புகழேந்தி ஆகியோர் லண்டன் வந்துள்ளனர்.

மற்றும் நடிகரும் தமிழ் உணர்வாளருமான சத்தியராஜ் அவர்களும் லண்டன் வர இருக்கிறார். பிரபல பின்னணிப் பாடகி மாதங்கி ஆகியோரும் தற்போது லண்டனில் உள்ளனர்.

இன்று மாலை 5.00 மணிக்கு குரோய்டனில் ஆரம்பமாகவுள்ள திரைப்பட வெளியீட்டு விழா இரவு 10.00 மணிவரை நடைபெறும் என்று ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.
புலம்பெயர் மக்கள் விரும்பும் பாடல்களை தான் பாடத் தயார் என்று பிரபல பின்னணிப் பாடகர் கிரிஷ் அவர்கள் தெரிவித்துள்ளார். தமிழ் நாட்டில் உள்ள பல உணர்வாளர்கள் ஒன்றாகக் கூடி லண்டனில் இதுபோன்ற ஒரு நிகழ்வை நடத்துவது இதுவே முதல் முறையாகும்.

இந் நிகழ்ச்சியில் நடிகர் சத்தியராஜ் அவர்கள் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொள்ள உள்ளார்.

0 Responses to உச்சிதனை முகர்ந்தால் இசைவெளியீட்டு நிகழ்ச்சியின் கலைஞர்கள் லண்டன் வந்தனர்!

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com