திமுக தலைவர் கலைஞர் கேள்வி - பதில் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
அவ்வறிக்கையில், ‘’பழிவாங்கும் நோக்கோடு யாரையும் கைது செய்யவில்லை என ஜெயலலிதா கூறியிருக்கிறாரே?’’ என்ற கேள்விக்கு,
’’தூங்கிக் கொண்டிருந்த அன்பழகன் எம்.எல்.ஏ.,வை, அதிகாலையில் தூக்கி வந்து எட்டு பிரிவுகளில் வழக்கு பதிந்துள்ளனர். இதில் புகார் கொடுத்தவர், 2009ல் நலிவடைந்த மில்களை வாங்கி, போலி ஆவணங்கள் மூலம், 250 கோடி ரூபாய்க்கு மேல் மோசடியில் ஈடுபட்டு கைதானவர்.
இவ்வழக்கு சி.பி.ஐ.,க்கு மாற்றப்பட்டுள்ளது. காவல் நிலையத்துக்கு கையெழுத்திட வந்த வீரபாண்டி ஆறுமுகத்தை, இன்னொருவர் புகார் கொடுத்திருக்கிறார் என கைது செய்துள்ளனர்.
திருவாரூரில் விபத்தில் மாணவர் இறந்ததற்கு, மாவட்டச் செயலர் தான் காரணம் என வழக்கு பதிந்து, பிரசாரத்திற்கு ஸ்டாலினோடு சென்ற நேரத்தில், வழிமறித்து அவரை கைது செய்துள்ளனர்.
இதையெல்லாம் பார்த்தாலே, ஜெயலலிதாவின் பழிவாங்கும் நடவடிக்கை தெரியும்’’ என்று தெரிவித்துள்ளார்.
பழிவாங்கும் நோக்கோடு யாரையும் கைது செய்யவில்லை என ஜெயலலிதா கூறியிருக்கிறாரே?: கலைஞர் பதில்
பதிந்தவர்:
Anonymous
31 July 2011



0 Responses to பழிவாங்கும் நோக்கோடு யாரையும் கைது செய்யவில்லை என ஜெயலலிதா கூறியிருக்கிறாரே?: கலைஞர் பதில்