சிங்கள இனவெறிக் காடையினரால் 1983 ஆம் ஆண்டு சிறிலங்காவில் நடாத்தப்பட்ட தமிழ் இனப் படுகொலையான கறுப்பு ஜுலை 28 ஆம் ஆண்டு நினைவு அமைதி ஊர்வலம் பிரான்ஸ் தமிழர் ஒருங்கிணைப்புக்குழு இளையோர் அமைப்பின் ஏற்பாட்டில் இன்று பிரான்ஸ் பாரிஸில் லாச்சப்பல் பகுதியில் மாலை 7 மணிக்கு ஆரம்பமாகி அன்வர் தேவாலய முன்றிலைச் சென்றடைந்தது.
அங்கு நினைவுக் கூட்டம் நடைபெற்றது.
இந்நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.ஜெயானமூர்த்தி கலந்து சிறப்பித்தார்.
கையில் மெழுகுவர்த்தி ஏந்தியவாறு பல நூற்றுக் கணக்கான மக்கள் இந்நிகழ்வில் உணர்வு பூர்வமாகக் கலந்து கொண்டனர்.
பிரான்ஸில் உணர்வு பூர்வமாக நடைபெற்ற கறுப்பு ஜுலை நிகழ்வு! (படங்கள் இணைப்பு)
பதிந்தவர்:
ஈழப்பிரியா
24 July 2011



0 Responses to பிரான்ஸில் உணர்வு பூர்வமாக நடைபெற்ற கறுப்பு ஜுலை நிகழ்வு! (படங்கள் இணைப்பு)