உள்ளுராட்சி தேர்தல் முடிவுகள், இன்னும் மஹிந்த ராஜபக்ச, தென்னிலங்கை சிங்கள மக்களின் ஆதரவை பெற்றுள்ளமையை காட்டுகிறது. இதனை இந்தியாவின் ஏசியா ரைம்ஸ் இணையத்தளம் தெரிவித்துள்ளது.
எனினும் வடக்கு, கிழக்கு தமிழர்களிடம் அவர் தோற்றுப்போயுள்ளதாக அந்த தளம் தெரிவித்துள்ளது.
வடக்குக்கு புனரமைப்பும், பொருளாதார அபிவிருத்தியும் தேவை என்று மஹிந்த ராஜபக்சவின் அரசாங்கம் கூறிவருகின்றமை இந்த தேர்தலில் பொய்யாகிப் போனதாக கொழும்பு பல்கலைக்கழகத்தின் அரசியல் விஞ்ஞானத்துறை தலைவர் சூசைப்பிள்ளை கீதபொன்கலன் தெரிவித்துள்ளார்.
ஏனெனில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினால் தமது பொருளதார நன்மைகளை பெற்றுக்கொடுக்க முடியாது என்பது வடக்கு, கிழக்கு தெரியும் என்பதையும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
தமிழர்கள் இனப்பிரச்சினைக்கான தீர்வை வலியுறுத்தியே தமது வாக்குகளை அளித்துள்ளனர்.
ஜனாதிபதியின் சகோதரரும் பொருளாதாரத்துறை அமைச்சருமான பசில் ராஜபக்ச, வடக்கின் தேர்தல் முடிவுகள் குறித்து அதிருப்தி வெளியிட்டுள்ளார்.
வடக்கை அபிவிருத்தி செய்ய ஜனாதிபதி கரம் நீட்டிய போதும் அங்குள்ள மக்கள் அதனை நிராகரித்து விட்டதாக அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.
இதேவேளை, வடக்கு, கிழக்கில் அபிவிருத்தி என்பது இனப்பிரச்சினைக்கான தீர்வு முனைப்புடன் மேற்கொள்ளப்பட வேண்டும் என்று நோர்வே பல்கலைக்கழகம் ஒன்றில் பணியாற்றும் இலங்கைத் தமிழரான என் சண்முகரட்ணம் குறிப்பிட்டுள்ளார்.
போர்க்குற்றவாளி மஹிந்த, சிங்களவர்களிடம் வெற்றி, தமிழர்களிடம் தோல்வி: ஏசியா ரைம்ஸ்
பதிந்தவர்:
Anonymous
27 July 2011



0 Responses to போர்க்குற்றவாளி மஹிந்த, சிங்களவர்களிடம் வெற்றி, தமிழர்களிடம் தோல்வி: ஏசியா ரைம்ஸ்