ஐ.நா. நிபுணர் குழு ராஜபக்சவை ஒரு போர்க் குற்றவாளி என்று அறிவித்த பின்னரும், அவரை சர்வதேச நீதிமன்றத்தில் நிறுத்துவதற்கு எவ்வித முயற்சியும் மேற்கொள்ளாது, ராஜபக்சவைக் காப்பாற்றத் தேவையான அனைத்தையும் செய்து வருகிறது என இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்கத் தலைவர் பழ.நெடுமாறன் தெரிவித்துள்ளார்.
ஈழத் தமிழர், தலித் கிறிஸ்தவர், தமிழக மீனவர் மற்றும் கச்சத்தீவு மீட்பு போன்ற பிரச்சனைகளுக்கு உடனடி தீர்வு காண மத்திய, மாநில அரசுகளை வலியுறுத்தி மதுரையில் கிறிஸ்தவ மனித உரிமை அமைப்பு சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்தில் இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்கத் தலைவர் பழ.நெடுமாறன் கலந்துகொண்டு பேசினார்.
அவர், இலங்கையில் நடைபெற்ற இனப் படுகொலை குறித்து ஐ.நா. சார்பில் குழு அமைத்து விசாரணை நடத்தப்பட்டது. அக்குழு ராஜபக்சவை ஒரு போர்க் குற்றவாளி என்று அறிவித்தது.
அதன் பின்னரும் ராஜபக்சவை சர்வதேச நீதிமன்றத்தில் நிறுத்த முடியவில்லை. இது குறித்து மத்திய அரசு எவ்வித முயற்சியும் மேற்கொள்ளவில்லை.
ஆனால், ராஜபக்சவைக் காப்பாற்றத் தேவையான அனைத்தையும் மத்திய அரசு செய்து வருகிறது என்றார்.
போர்க்குற்றவாளி ராஜபக்சவைக் காப்பாற்றுகிறது மத்திய அரசு!: பழ. நெடுமாறன்
பதிந்தவர்:
தம்பியன்
23 July 2011



0 Responses to போர்க்குற்றவாளி ராஜபக்சவைக் காப்பாற்றுகிறது மத்திய அரசு!: பழ. நெடுமாறன்