உலகத் தமிழ் இயக்க கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் குழு தலைவர் வா.மு. சேதுராமன் சென்னையில் இன்று செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது அவர், ‘’இலங்கையில் நடைபெற்ற இறுதிக்கட்ட போரில் அப்பாவி தமிழர்கள் கொடூரமாக கொல்லப்பட்டனர். இதை உலக நாடுகள் அனைத்தும் கண்டித் துள்ளன. ஐ.நா.சபையும், இலங்கை அதிபர் ராஜபக்சே மீது போர்குற்றம் சாட்டி உள்ளது.
தமிழக சட்டசபையிலும் இலங்கை மீது பொருளாதார தடை விதிக்க கோரி தீர்மானம் நிறைவேற்றி உள்ளது. ஆனால் மத்திய அரசு கண்டும் காணாதது போல் உள்ளது. எனவே ராஜபக்சே மீது நடவடிக்கை எடுக்கும்படி இந்தியா வலியுறுத்தக்கோரி டெல்லியில் உண்ணாவிரத போராட்டம் நடத்த உள்ளோம்.
உலக தமிழ் இயக்கங்களில் உள்ள 120-க்கும் மேற்பட்ட சங்கங்கள் இந்த போராட்டத்தில் பங்கு பெறுகின்றன. வருகிற 28-ந்தேதி டெல்லி பாராளுமன்றம் அமைந்துள்ள ஜந்தர்மந்தர் வீதியில் இந்த உண்ணாவிரதம் நடக்கிறது.
தொல்.திருமாவளவன் எம்.பி. இதை தொடங்கி வைக்கிறார்.
அனைத்து கட்சியினரும் இதில் கலந்து கொள்ளுமாறு அழைப்பு விடுத்துள்ளோம்’’என்று கூறினார்.
ராஜபக்சே மீது நடவடிக்கை எடுக்க கோரி டெல்லியில் உண்ணாவிரதம்: திருமா தொடங்கி வைக்கிறார்
பதிந்தவர்:
Anonymous
20 July 2011



0 Responses to ராஜபக்சே மீது நடவடிக்கை எடுக்க கோரி டெல்லியில் உண்ணாவிரதம்: திருமா தொடங்கி வைக்கிறார்