சிறிலங்காப் போரில் ஒன்றரை இலட்சம் ஈழத் தமிழர்களை படுகொலை செய்த சிறிலங்கா ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவை போர்க்குற்றவாளியாக இந்திய அரசு அறிவிக்கவும் -
இலங்கைக்கு இந்தியா பொருளாதாரத் தடை விதிக்கவும் - தமிழரின் கச்ச தீவை மீட்கக் கோரியும் -
இந்திய அரசை வலியுறுத்தி தமிழ் பண்பாட்டு சங்கம் நடத்தும் ஒருநாள் பட்டினிப் போராட்டம் நாளை 21.07.2011 வியாழக்கிழமை குமணன்சாவடி, பூவிருந்தவல்லி, சென்னையில் காலை 9.30 முதல் மாலை 5.30 வரை இடம்பெறவுள்ளது.
இந்நிகழ்வில் கலந்து கண்டன உரைகளை உலகத் தமிழர் பேரமைப்புத் தலைவர் பழ.நெடுமாறன் ஐயா, தோழர் தியாகு , தோழர் முகம் மாமணி, தோழர் அருகோ, தோழர் ஆ.கோ.குலோத்துங்கன், தோழர் மண்மொழி இராசேந்திரசோழன்,தோழர் அன்றில் பா. இறை எழிலன், வழக்கறிஞர் தி.ந. நந்தக்குமார், தோழர் அ.சி.சின்னப்பத்தமிழர், திரைப்பட இயக்குநர் சந்தனக்காடு வ.கௌதமன், பாவலர் மு.,ராமச்சந்திரன், தோழர் கா.பா. பன்னீர்ச்செல்வம், இசைப்பாவலர் நா.நந்தன், தோழர் க.ச.கலையரசன் ஆகியோர் ஆற்றவுள்ளனர்.
நாம் தமிழர் கட்சித் தலைவர் தோழர் சீமான் பட்டினிப்போராட்டத்தை முடித்துவைத்து உரையாற்றவுள்ளார்.
இந்நிகழ்வில் கலந்துகொள்ளுமாறு தமிழ் உணர்வாளர்கள் அனைவருக்கும் தமிழ் பண்பாட்டு சங்கம் அழைப்பு விடுத்துள்ளது.
இலங்கை அரசுக்கு எதிராக தமிழ் பண்பாட்டு சங்கம் நடத்தும் ஒருநாள் பட்டினிப் போராட்டம்!
பதிந்தவர்:
Anonymous
20 July 2011



0 Responses to இலங்கை அரசுக்கு எதிராக தமிழ் பண்பாட்டு சங்கம் நடத்தும் ஒருநாள் பட்டினிப் போராட்டம்!