2011 கான மாவீரர் ஞாபகார்த்த விளையாட்டுப் போட்டியானது 10.07.2011 ஞாயிற்றுக்கிழமை அன்று Rubiera மைதானத்தில் தமிழ் அமைப்புகள, பெற்றோர்கள், மாணவர்கள் மற்றும் வீர வீராங்கனைகளின் முன்னிலையில் 9.45 மணியளவில் இத்தாலி மேற்பிராந்திய ஈழத்தமிழர் விளையாட்டுச் சம்மேளனத் தலைவர் திரு. நாகமுத்து லலிதகுமார் பொதுச்சுடர் ஏற்ற ஆரம்பமாகி, தொடந்து தமிழீழ தேசிய கொடியினை இத்தாலி மேற்பிராந்திய தமிழர் ஒன்றிய தலைவர் திரு. மயில்வாகனம் பாஸ்கரநாரயணன் அவர்கள் ஏற்றி வைத்தார்.
அதனை தொடர்ந்து அகவணக்கம் இடம் பெற்றது. தாயகம், எதிர் விக்ரர் அணிகளுகக்கிடையிலான உதைபந்தாட்டத்துடன் அனைத்து விளையாட்டுக்களும் ஆரம்பமாகின.
பெற்றோர்கள் பார்வையாளர்கள் ஒத்துழைப்புடன் வீரர்களின் உற்சாகமான விளையாட்டுக்கள் இனிதே நடைபெற்று முடிந்தது. அவர்களுக்கான சான்றிதழ், மற்றும் வெற்றிக் கேடயங்கள் வழங்கி வீரர்கள் கௌரவிக்கப்பட்டார்கள்.
இரவு 22.00 மணியளவில் தேசியக் கொடி இறக்கப்பட்டு அனைத்து நிகழ்வுகளும் இனிதே நிறைவுபெற்றது.
இத்தாலி மேற்பிராந்தியத்தில் நடைபெற்ற மாவீரர் ஞாபகார்த்த விளையாட்டு போட்டி (படங்கள்)
பதிந்தவர்:
ஈழப்பிரியா
18 July 2011



0 Responses to இத்தாலி மேற்பிராந்தியத்தில் நடைபெற்ற மாவீரர் ஞாபகார்த்த விளையாட்டு போட்டி (படங்கள்)