யேர்மனியின் தென்மாநிலத் தமிழாலயங்களுக்கிடையிலான மாவீரர் வெற்றிக்கிண்ண விளையாட்டுப்போட்டி கடந்த 16.7.2011 சனிக்கிழமையன்று சிறப்பாக நடைபெற்றது.
தேசியக்கொடியேற்றல் வைபவத்துடன் ஆரம்பிக்கப்பட்ட நிகழ்வில் தமிழாலயங்களின் அணிவகுப்பு மரியாதை ஏற்றுக் கொள்ளப்பட்டது.அதனைத் தொடர்ந்து போட்டிகள் ஆரம்பமானது பல நூற்றுக்கணக்கான மாணவர்கள் மிகவும் ஆர்வத்துடன் கலந்துகொண்டு தங்களது திறமைகளை வெளிக்காட்டினர்.
பல தமிழாலயங்கள் கலந்துகொண்ட இப் போட்டிகளில் முன்சன் 396 புள்ளிகளைப் பெற்று முதலிடத்தையும், கேர்கைம்ரெக் தமிழாலயம் 379 புள்ளிகளைப் பெற்று இரண்டாவது இடத்தையும், ஸ்ருட்காட் தமிழாலயம் 348புள்ளிகளைப் பெற்று மூன்றாம் இடத்தையும். பெற்றுக் கொண்டன.
இப்போட்டிகளில் கலந்துகொண்ட எல்லாப் போட்டியாளர்களுக்கும் ஊக்குவிப்புச் சான்றிதழ்களும் சிறந்த வீரர்களுக்கு பதக்கங்களும்,வெற்றிக் கிண்ணங்களும் வழங்கப்பட்டு மதிப்பளிக்கப்பட்டது. பெற்றோர்கள் மாணவர்கள் ஆசிரியர்கள் தமிழாலய நிர்வாகிகள் செயற்பாட்டாளாகள் மிகவும் ஆர்வத்துடன் கலந்துகொண்டு சிறப்பித்த இப்போட்டிகள் தேசியக்கொடி இறக்கும் நிகழ்வுடன் இனிதே நிறைவேறியது.
கடந்த இருவருடங்களாக தாயகத்தில் இடம்பெற்ற அசம்பாவித சூழ்நிலைகாரணமாக இப்போட்டிகள் நடைபெறாத போதிலும் இவ் வருடம் அதிகமான மாணவர்களும் பெற்றோர்களும் இப்போட்டிகளில் கலந்துகொண்டு சிறப்பித்தமை குறிப்பிடத்தக்கதாகும்.
யேர்மனியில் நடைபெற்ற மாவீரர் வெற்றிக்கிண்ண விளையாட்டுப் போட்டி (படங்கள் இணைப்பு)
பதிந்தவர்:
ஈழப்பிரியா
18 July 2011



0 Responses to யேர்மனியில் நடைபெற்ற மாவீரர் வெற்றிக்கிண்ண விளையாட்டுப் போட்டி (படங்கள் இணைப்பு)