நியூசிலாந்து நாட்டின் தமிழ் இளையோர் அமைப்பினரால் ஓக்லாந்து நகரில் Balmoral Church Hallல் Sunday 17th July, அன்று தற்கொடையாளர்களை நினைவுகூறும் நினைவு நாள் உணர்வு பூர்வமாக நடைபெற்றது .
முதலில் ஈகைசுடரினை மாவீரன் லெப்ட் கேணல் தங்கச்சியனின் சகோதரன் ஏற்றிவைத்தார். தொடர்ந்து தற்கொடையாளர்களை நினைவு கூர்ந்து அனைவரும் மலர் வணக்கம் செலுத்தினர் தொடர்ந்து தமிழ் இளையோர் அமைபின் உறுப்பினர் குமரன் உரை நிகழ்த்தினார். இவர் தனது உரையில் தமிழர் வரலாற்றின் வீரகாவியமான் .
அந்த இரும்புமனிதர்களின் உடல்களும், உணர்வுகளும் கலந்த காற்றை சுவாசிக்கும் தமிழீழ விடுதலை விரும்பிகளின் இதயம் அவர்களின் பெயர் சொல்லியே துடிக்கும்.
அது புதியதோர் புரட்சியாய் வெடிக்கும். அந்த வெடிப்பின் நடுவே தமிழீழம் மலரும். அன்றைய நாள் தமிழீழ வான் பரப்பில் இந்த தற்கொடையாளர்களான இரும்புமனிதர்கள் நட்சத்திரங்களாய் மின்னுவர் என்பது உறுதி. என்று தனது உரையை முடித்தார் .
தொடர்ந்து தற்கொடையாளர்களை விபரிக்கும் உணர்வு மிக்க கவிதைகளும் இடம்பெற்றன. இன்நிகழ்வில் நுற்றுக்கணக்கான மக்கள் கலந்துகொண்டனர்.








0 Responses to நியூசிலாந்தில் உணர்வுபூர்வமாக நடைபெற்ற கரும்புலிகள் நினைவு நாள்! (படங்கள் இணைப்பு)