Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

இலங்கை இனவாத அரசின் இனப் படுகொலையின் ஓரங்கமான "கறுப்பு யூலை" 28 வது ஆண்டு நினைவாக யேர்மனியில் பல நகரங்களில் கவனயீர்ப்பு நிகழ்வுகள் நடைபெறுகின்றது .அந்த வகையில் கறுப்பு யூலை 23 ம் நாளில் யேர்மனியின் தலைநகரம்Berlin தொடக்கம் பரவலாக Bremen, Osnabrück, Ibbenbüren ,Essen, Stuttgart, Dortmund, Bruchsal, Bonn, Hannover, Hamburg, Landau, Köln, Saarbrücken , Bielefeld நகரங்களில் பரப்புரை போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

கறுப்பு யூலை தமிழர் இனவழிப்பு தினத்தை நினைவு கூறும் அதே வேளையிலும் 2009 ஆண்டின் தமிழர் இனவழிப்பை நினைவு கூறி அஞ்சலி செலுத்தப்பட்டு தமிழர் மீது 60 ஆண்டுகளுக்கும் மேலாக தொடரும் கொடுமையான இனவழிப்பை கருத்தில் கொண்டு துண்டுப் பிரசுரங்களும் கொடுக்கப்பட்டு; 146 679 தமிழர்களுக்கும் என்ன நடந்தது எனும் தலைப்பில் கண்காட்சியும் வைக்கப்பட்டது.

சிறப்பாக "இலங்கையில் கொலைக்களம்"காணொளியும் ஆவலான மக்களுக்கு வழங்கப்பட்டது. அத்துடன் சில நகரங்களில் "இலங்கையில் கொலைக்களம்" காணொளி மக்களுக்கு தொலைக்காட்சி ஊடாக ஒளிபரப்பப் பட்டது. பல நகரங்களில் பல்லின மக்களுடன் உரையாடும் போது அவர்களுக்கு தமிழர்கள் நிலைமை விளங்குவதாகும் சிறப்பாக யேர்மனியில் இலங்கை துணைத் தூதுவராக செயல்ப்படும் போர்குற்றவாளி மேஜர் ஜெகத் டியாஸ் செய்தி அறிந்து ஆதங்கம் அடைந்தனர். அத்துடன் தமிழ் மக்களை தொடர்ந்து தமது விடுதலைக்கு போராடும் படியும் வேண்டிக்கொண்டனர்.

எதிர்வரும் கவனயீர்ப்பு நிகழ்வுகள் நடைபெறும் தகவல்கள் பின்வருமாறு:

25.07.2011 - 10 மணிக்கு BochumKortumstr C & A அருகாமையில்

27.07.2011 - 12 மணிக்கு Düsseldorf Altstadt Heinrich - Heine Platz

27.07.2011 - 15 :30 மணிக்கு München Odeonplatz

30.07.2011 - 10:00 மணிக்கு Nürnberg Hallplatz 1Kaufhof அருகாமையில்

நன்றி

யேர்மன் ஈழத்தமிழர் மக்கள் அவை







0 Responses to யேர்மனியில் "கறுப்பு யூலை" நினைவு சுமந்த கவனயீர்ப்பு (படங்கள், காணொளி இணைப்பு)

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com