பிரான்சு தமிழ்ச்சோலை தலைமைச் செயலகமும் தமிழீழ மக்கள் பேரவையும் இணைந்து தமிழ்ச்சோலை மாணவர்களின் இல்லங்களுக்கிடையிலான மெய்வல்லுநர் போட்டிகள் இன்று சனிக்கிழமை காலை 9.30 மணியளவில் ஈகைச்சுடர் ஏற்றலுடன் Stade Pershing Vincennes மைதானத்தில் நடைபெற்றது.
ஈகைச்சுடரினை மாவீரர் குடும்பத்தைச் சேர்ந்த திரு. செல்வநாதன் அவர்கள் ஏற்றிவைத்தார்.
தொடர்ந்து அகவணக்கம் செலுத்தப்பட்டது. தொடர்ந்து விளையாட்டுப் போட்டிகள் ஆரம்பமாகின.
இந்நிகழ்வில் அங்கையற்கண்ணி, சாள்ஸ், ஜெயந்தன், மாலதி, ராதா, சோதியா ஆகிய இல்லங்கள் பங்குபற்றியிருந்தன.
இன்றைய போட்டிகளில் 09 அகவை முதல் 18 அகவைக்கு உட்பட்ட மாணவர்களுக்கான போட்டிகள் இடம்பெற்றிருந்தன.
தொடர்ந்து நாளை ஞாயிற்றுக்கிழமையும் இறுதிப் போட்டிகள் Stade Pershing Vincennes மைதானத்தில் இடம்பெறவுள்ளதாக ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.
இன்று மாலை ஈருருளிப் பயணத்தை மேற்கொண்ட உணர்வாளர்களும் இந்த விளையாட்டுப் போட்டிகளில் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.
இந்நிகழ்வில் பெரும் எண்ணிக்ககையான தமிழ்ச்சோலை மாணவர்கள் ஆர்வத்துடன் போட்டிகளில் கலந்துகொண்டதாக எமது செய்தியாளர் அங்கிருந்து தெரிவித்தார்.






0 Responses to பாரிஸில் நடைபெற்ற தமிழ்ச்சோலை இல்ல மெய்வல்லுநர் போட்டிகள்! (படங்கள் இணைப்பு)