இறுதி யுத்தம் நடைபெற்ற இறுதிக்கால பகுதியில் சிங்கள இராணுவத்தால் தமிழ்மக்கள் வாழ்விடங்கள் மீது உலகில் தடைசெய்யப்பட்ட பொஸ்பரஸ் எரி குண்டுகளை வீசி மக்கள் கோரமாக கொலை செய்யப்பட்டுள்ளனர்.
மக்களை மீட்கும் போர் என சிங்கள பௌத்த பேரினவாதம் கூறியபடி தமிழர்களின் நிலத்தை அங்கு வாழ்ந்த பாரம்பரிய தமிழர்களை கூண்டோடு அழித்து அவர்களை மனித நாகரிகத்திற்கு முரணாக கொன்று குவித்துள்ளது சிங்கள ஆளும் மகிந்த அரசு.
பதுங்கு குழிகளில் பாதுகாப்பு தேடி இருந்தவர்கள், உறங்கியவர்கள் மீது எரி குண்டுகளை வீசி மூச்சுத் திணறடித்து அதன் வாயிலாக உடல் எல்லாம் எரிந்து துடி துடிக்க எங்கள் உறவுகள் இறந்துள்ளனர்.
இவ்வாறு பல போராளிகள் தலைவர்கள் நச்சுக் குண்டு வீசி, மூச்சுத் திணறலில் மயக்கமுற்று சுய நினைவற்று இருந்த நிலையில் பல தளபதிகள், தலைவர்கள் கைது செய்யப்பட்டு, கோரமாக தலைகள் வெட்டப்பட்டு, நகங்கள் பிடுங்கப்பட்டு, இரும்புக் கம்பிகளினால் தாக்கப்பட்டு, பெட்ரோல் அசிட் வீசி கோர மகாவதை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளனர்.
அந்த காட்சி படங்களை பார்க்கும் ஒவ்வொரு மானமுள்ள தமிழனின் இரத்தம் கொதிக்கும் சிங்கள ஆட்சியாளர்களை அடியோடு அழிக்க துடிக்கும்.
துயர் தோய்ந்த தமிழரின் வாழ்கையில் ஆறாத சோகமாக இருக்கும் முள்ளிவாய்க்கால் சிங்களப் படுகொலை, இன அழிப்பு நடத்திய இரத்தம் தோய்ந்த காட்சி, அதிர்ச்சி காட்சி படங்கள் பார்த்த பின் ஒவ்வரு மானமுள்ள தமிழனும் உறங்குவானா?!
எங்கள் மாவீரர் கல்லறைகளில் சத்தியம் செய்து எமது தேசிய விடுதலைக்காக அனைவரும் ஒன்றிணைந்து போராட வேண்டிய தருணம் இது.
சோர்வை தளர்த்தி வீறு கொண்டு எழுவோம்! எங்கள் ஈழமதை மீட்போம்! இந்த மக்கள் மீதும் மண் மீதும் விதையாய் வீழ்ந்த மாவீரர்கள் மீதும் உறுதி எடுப்போம்!
உங்கள் கசப்புகளை மறந்து அனைத்து அமைப்புகளும் அனைத்து ஊடகங்களும் ஒன்றாக குரல் எழுப்பி மகிந்த ராஜபக்சவையும், போர்க்குற்றம் புரிந்த அனைவரையும் கூண்டில் ஏற்றுவோம்.



இளமாறன் தமிழ் நாடு
சிங்களத்துடன் எந்த காலத்திலும் , எந்த நேரத்திலும் , எவ்விதத்திலும் தமிழர்கள் சமசரசம் செய்து கொள்ள கூடாது. சர்வதேசத்துக்காக , சில விஷயத்தில் சில நேரங்களில் தமிழர்கள் பேசுவார்த்தையில் ஈடு பட நேர்ந்தாலும். தமிழர் மனம் நீர் பூத்த நெருப்பாக இருந்து , நமது லட்சியமான தமிழீழ தாயகத்தை அடைந்தே தீர வேண்டும்.