ஆளும்கட்சி வடக்கில் அரசின் அனைத்து வளங்களையும் பயன்படுத்தி, களத்தில் படை பட்டாளத்துடன் இறங்கிப் பிரசாரத்தில் ஈடுபட்ட போதும், மானம் கொண்ட தமிழ் மக்கள் ஜனநாயக வழி முறையில் தகுந்த பதிலடி கொடுத்துத் தலைநிமிர்ந்து நிற்கின்றனர். இவ்வாறு தமிழர் தரப்பு மூத்த அரசியல்வாதிகளும் புத்திஜீவிகளும் கருத்து வெளியிட்டுள்ளனர்.
இலவசப் பொதிகள், சைக்கிள், வேட்டி, சேலை என்று இலவசங்களை அள்ளி வழங்கியபோதும் தமிழ் பெருமக்கள் அசைந்து விடவில்லை.
நாட்டின் ஜனாதிபதி முதல் அமைச்சர்கள் மற்றும் ஆளும் கட்சியில் நாடாளுமன்ற உறுப்பினர்கள், அரசின் உயர்மட்ட அதிகாரிகள் என முழு அதிகார ஆளணியும் வடக்கில் முகாமிட்டு அடிக்கற்கள் நட்டும், பாடசாலைக் கட்டடங்களைத் திறந்தும், வீதிகளைத் திறந்து வைத்தும், மீள்குடியமர்வுகளைச் செய்த போதும் அவலங்களை அனுபவித்த எம்மக்கள் ஏமாறவில்லை.
அவர்கள் சரியான வேளையில் தருணம் பார்த்து சாட்டையடி கொடுத்துள்ளனர்.
அரசுக்கும் வெற்றிலைச் சின்னத்தில் போட்டியிட்ட அனைத்துத் தரப்புக்கும் முகத்தில் அடித்தாற்போன்று பதிலடி கொடுத்துள்ளனர்.
அதேசமயம், சர்வதேசம் இந்தத் தேர்தலை வெகு உன்னிப்பாகக் கூர்ந்து கவனித்தபடி இருந்தது. சர்வதேசத்தையும் ஏமாற்றி திசைதிருப்பி தமிழர்கள் எம்பக்கம் என்பதைக் காட்டிவிட அரசு பகீரத முயற்சிகளைச் செய்துவந்தது. அந்த முயற்சிகளையும் அடியோடு முறியடித்துவிட்டனர் எம்மக்கள்.
ஆளும்கட்சிக்குப் பின்னால் அணிவகுத்து தமிழ் விரோதப் போக்கைத் தங்கள் வயிற்றுப் பிழைப்புக்காக ஆதரித்து, சிங்களப் பேரினவாதத்துக்குக் குடைபிடித்து வந்த வேடதாரிகளுக்கும் முறையாகப் பாடம் புகட்டி விட்டனர் மறத்தமிழர்கள் என்று அவர்கள் தெரிவித்தனர்.
சைக்கிள், வேட்டி, சேலை கொடுத்தவர்களுக்கு தமிழ் வாக்காளர்கள் சாட்டையடி
பதிந்தவர்:
ஈழப்பிரியா
24 July 2011



0 Responses to சைக்கிள், வேட்டி, சேலை கொடுத்தவர்களுக்கு தமிழ் வாக்காளர்கள் சாட்டையடி