Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

அன்புக்கும் மதிப்புக்குமுரிய சுவிஸ் வாழ் தமிழ் பேசும் மக்கள் அனைவருக்கும் சுவிஸ் ஈழத்தமிழரவையின் புரட்சிகரமான விடுதலை வணக்கங்கள்

எமது தமிழீழ தேசம் சிறீலங்கா பயங்கரவாத இனவெறியரசால் மேற்கொள்ளப்பட்டுவரும் கொடிய இன அழிப்பால் பல மனித அவலங்களைச் சந்தித்திருக்கின்ற போதும் 1983 ஆம் ஆண்டு யூலை மாதம் முகம்கொடுத்த கூட்டுப்படுகொலைக்களமானது தமிழீழ மக்கள் அனைவரதும் உள்ளங்களிலும் அழியாத வடுவாக பதிந்துள்ள நினைவுகளாகும். சிங்களம் தனது கொடிய இனவெறி கோரத்தாண்டவத்தை தமிழீழ மக்கள் மீது மேற்கொண்ட கொடிய நாட்களாகும். தமிழர்கள் தம்மைத் தாமே தற்காத்துக் கொள்ள வேண்டும் என்ற அவர்களின் நிலைப்பாடு அவசியமே என்று திண்ணமாகக் கூறிய நாட்களாகும்.

அன்று மட்டுமா? இத் தொடர் தமிழின அழிப்பு வரலாற்றில் முள்ளிவாய்க்கால் இனப்படுக்கொலைக்களமும் இன்று உலகத்தின் மனச்சாட்சியை உலுப்பி நிற்கிறது. சனல் 4 தொலைக் காட்சியில் வெளியிடப்பட்ட படுகொலைக் காட்சிகளானது பல சர்வதேச நாடுகளின் கவனத்தையும் தமிழர்கள் மீது ஈர்த்துவருகிறது.

ஆனால் நாம் வாழும் சுவிஸ் நாடு இவை சார்ந்த தனது எவ்வித நிலைப்பாடுகளையும் வெளிக்காட்டாது மௌனம் சாதித்து வருகிறது. சமபொழுதில் போர் காரணமாகவும் அரச பயங்கரவாதத்தாலும் புலம்பெயர்ந்து அகதித் தஞ்சம் கோரி நிற்கும் எமது உறவுகளை மனிதபண்பற்று கொலைக்கள நாடாம் சிறீலங்காவிற்கு திரப்பியனுப்பிவருகிறது.

சுவிஸ் நாட்டின் இப் பாராமுகத்தைக் கண்டித்து எதிர்வரும் 28-07-2011 வியாழக்கிழமை 14 மணிக்கு பேர்ன் Waisenhausplatz சதுக்கத்தில் கவனயீர்ப்ப ஒன்றுகூடலும் கறுப்பு யூலை நினைவு கூரலும ஏற்பாடுசெய்யப்பட்டுள்ளது. (நாடாளுமன்றம் முன்பாக ஏற்பாடுசெய்யப்பட்டிருந்த கவனயீர்ப்பு இடம் மாற்றப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது)

மிகவும் முக்கியமான ஓர் காலகட்டத்தின் அவசியமான இக் கவனயீர்பில் அணி அணியாக ஒன்றுதிரளுமாறு சுவிஸ் ஈழத்தமிழரவையினராகிய நாம் உரிமையுடன் அழைக்கிறோம்.

தமிழீழமே தாகமென எம்முறவுகள் மானச்சாவேந்தி வீழ்ந்த நாளில் வீச்சுடன் எம் விடுதலைக்காய் எழுவோம் வாரீர்.

தமிழரின் தாகம் தமிழீழத்
தாயகம் சுவிஸ் ஈழத்தமிழரவை

0 Responses to கவனயீர்ப்பு இடம் மாற்றப்பட்டுள்ளது - சுவிஸ் ஈழத்தமிழரவை

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com