சிறிலங்காப் போரில் ஒன்றரை இலட்சம் ஈழத் தமிழர்களை படுகொலை செய்த மகிந்த ராஜபக்சவை போர்க்குற்றவாளியாக இந்திய அரசு அறிவிக்கவும் -இலங்கைக்கு இந்தியா பொருளாதாரத் தடை விதிக்கவும் - தமிழரின் கச்ச தீவை மீட்கக் கோரியும் -இந்திய அரசை வலியுறுத்தி தமிழ் பண்பாட்டு சங்கம் நடத்தும் ஒருநாள் பட்டினிப் போராட்டம் இன்று நடத்தப்பட்டுள்ளது.
அதில் கருத்துரைத்த உலகத்தமிழர் இயக்கதலைவர் பழநெடுமாறன் அவர்கள் மகிந்தறாஜபக்ச போர்குற்றவாளி என்று உலகம்முழுவதும் குரல்ஒலிக்க தொடங்கிவிட்டதுஅந்தவகையில் இந்தியாமுழுவதிலும் ஈழத்தமிழ் மக்களுக்கா குரல் ஓங்கிஒலிக்க தொடங்கிவிட்டதுசிங்கள அரசின் தமிழன படுகொலைக்கு இந்திய அரசு மௌனம் சாதித்து என்பது மறைமுகமாக மகிந்தவை காப்பாற்ற முயற்சிசெய்கின்றார்கள்என்பதே ஆகும்ஒருலட்சத்திற்கு மேற்பட்ட தமிழ்மக்களை படுகொலை செய்த றாஜபச்சவை காப்பாற்ற இந்தியா துடித்துக்கொண்டிருக்கின்றது இந்தியாமுழுவதிலும் எங்கள் குரல்கள் ஓங்கிஒலிக்கவேண்டும் என்றும் அவர்தெரிவித்துள்ளார்.
இன்றைய உண்ணாவிரநிகழ்வின் இறுதியில் தோழர் தியாகுஇபோராசிரியர் தீரன் உள்ளிட்ட தமிழ்உணர்வாளர்கள் கலந்துகொண்டு உண்ணாவிரத நிகழ்வினை நிறைவு செய்துள்ளார்கள்.
ஈழத்தமிழருக்கு ஆதரவாக இந்தியாமுழுவதிலும் குரல் ஓங்கி ஒலிக்க தொடங்கிவிட்டது: பழநெடுமாறன்
பதிந்தவர்:
தம்பியன்
22 July 2011



0 Responses to ஈழத்தமிழருக்கு ஆதரவாக இந்தியாமுழுவதிலும் குரல் ஓங்கி ஒலிக்க தொடங்கிவிட்டது: பழநெடுமாறன்