Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

யூலை 1983 இன் பொழுது தமிழ் மக்கள் மீது அநியாயமாக நிகழ்த்தப்பட்ட இனக்கலவரங்கள் இலங்கை அரசினாலும் சிங்கள மக்களினாலும் திட்டமிடப்பட்டு நடத்தப்பட்டன.

யூலை இனக்கலவரத்தினால் ஆயிரக்கணக்கான மக்கள் வாழ்வை, வீட்டை, சொத்தை, நிம்மதியை, உறவினரை இழந்து தவிர்தனர், இன்றும் தவிர்த்துக் கொண்டிருக்கின்றனர். இவ்வாறான கறுப்பு யூலையினை தமிழ் மக்கள் மனதில் நிறுத்தி ஆண்டு தோறும் நினைவு கூர்ந்து வருகின்றனர்.

அந்த வகையில் டொரோண்டோ மாநகரில் தமிழ் இளையோர் அமைப்பினாலும் பல்கலைக்கழகங்களின் தமிழ் மாணவர் அமைப்புகளினாலும் “I Remember” கறுப்பு யூலை பரப்புரை நிகழ்வு முன்னேடுக்கபட்டுவருகின்றது வேற்று இன மக்களுக்கு தமிழ் இன மக்களின் படுகொலைகளை விளக்கும் வண்ணம் மக்கள் பெருவாரியாக கூடும் டொரோண்டோ மத்திய பிரதேசத்தில் இவ் பரப்புரை நிகழ்வு முன்னெடுக்கபட்டது.

இந் நிகழ்வில் தமிழ் இளையோர்களால் தொலைகாட்சி 4 ஒளிபரப்பிய " Sri Lanka's Killing Field " என்ற விவரணச்சித்திரம் ஒளிப்பெளைகளில் இட்டு வேற்று இன மக்களுக்கு கையளிக்க பட்டது இதோடு இலங்கை அரசாங்கத்தின் போர் குற்ற நீதியான விசாரணைகளை மேற்கொள்ள கனடிய அரசாங்கம் அழுத்தம் கொடுக்க வேண்டும் என்று கனடிய அரசாங்கத்தை வலியுறுத்தி கையெழுத்து வேட்டை நடைபெற்றது. இந் நிகழ்வில் தமிழ் இளையோர்கள் பெருவாரியாக பங்குகொண்டார்கள் இப் பரப்புரை நிகழ்வு 2009 ஆம் ஆண்டு தமிழ் மக்கள் ஆர்ப்பாடங்கள் மேற்கொண்ட இடத்தில நடைபெற்றது என்பது குறிப்பிட தக்கது.





0 Responses to கறுப்பு யூலையை முன்னிட்டு கனடியத் தமிழ் இளையோர் முன்னெடுத்த நிகழ்வு (படங்கள்)

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com