Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

சிறிலங்கா அரசினால் திட்டமிட்டு நிகழ்த்தப்பட்ட தமிழின அழிப்பு நடவடிக்கையின் பதினோராம் ஆண்டு நினைவு நாள.

யாழ்ப்பாணம் நவாலியில் புனித பேதுருவானர் தேவாலயம் மீது இலங்கை விமானப்படையின் 'புக்காரா' விமானம் குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தியது. இத்தாக்குதலில் 65 அப்பாவி பொதுமக்கள் கொல்லப்பட்டனர்.

150 க்கும் மேற்பட்ட பொதுமக்கள் காயமடைந்ததும் இந்த நாளிலேயாகும். யாழ்ப்பாணத்தை முற்றாகக் கைப்பற்ற அரசு திட்டம் போட்டிருந்தது.

அதன் முதற்கட்டமாக வலிகாமத்தின் முக்கிய பகுதிகளைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரும் திட்டம் தான் 'முன்னேறிப் பாய்தல்' என்ற பெயரில் முன்னெடுக்கப்பட்ட இராணுவ நடவடிக்கை.
பெருமளவு எறிகணை வீச்சுடன் இந்நடவடிக்கை தொடங்கப்பட்டபோது ஆயிரக்கணக்கான குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் இடம்பெயர்ந்தனர்.

யாழ்ப்பாணத்தின் முக்கிய பட்டினமான மானிப்பாயிலும் அதற்கடுத்த கிராமமான நவாலியிலும் பெருமளவு மக்கள் வந்து சேர்ந்தனர். நவாலியிலுள்ள கத்தோலிக்கத் தேவாலயமான புனித பேதுருவானவர் கோயிலில் பெருமளவு மக்கள் தஞ்சமடைந்தனர்.

அன்று பகல் வேளையில் நவாலி புனித பேதுருவானர் தேவாலயம் மீது இலங்கை விமானப்படையின் 'புக்காரா' விமானம் 13 குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தியது.

இந்த தாக்குதலில் தேவாலயமும் அதனுள் தஞ்சமடைந்திருந்த மக்களும் சிதறடிக்கப்பட்டனர். சிறுவர்கள், பெண்கள் என்று ஏராளமானோர் கொல்லப்பட்டனர்.

பெருமளவான உடல்கள் முழுமையாக எடுக்கப்படவில்லை. சதைத்துண்டுகள் தாம் பொறுக்கப்பட்டன.

ஈழப்போராட்ட வரலாற்றில் மறக்க முடியாத கறுப்பு தினமாகும். நவாலியிலுள்ள கத்தோலிக்க தேவாலயத்தில் இறந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும்முகமாக பல நிகழ்வுகள் இடம்பெற்றுள்ளன.

0 Responses to நவாலிப் படுகொலை நினைவு நிகழ்வில் கண்ணீருடன் கலந்துகொண்ட உறவுகள் (காணொளி இணைப்பு)

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com