இராணுவ ஆட்சியை வடக்கு மக்கள் நிராகரித்துள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராசா தெரிவித்துள்ளார்.
இராணுவ நிர்வாகமற்ற வடக்கின் அவசியம் நடைபெற்று முடிந்த உள்ளுராட்சி மன்றத் தேர்தலின் போது வலியுறுத்தப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.
பிரபல சிங்கள ஊடகமொன்றுக்கு அளித்த செவ்வியின் போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
கடுமையான அழுத்தங்களுக்கு மத்தியிலும் வடக்கு மக்கள் நம்பிக்கையுடன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கு ஆதரவாக வாக்களித்த்துள்ளதாகத் தெரிவித்துள்ள அவர், வடக்கில் மக்களின் உரிமைகளை உறுதிப்படுத்தக் கூடிய ஓர் சூழ்நிலை விரைவில் உருவாக்கப்பட உள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.
கூட்டமைப்பின் சார்பில் போட்டியிட்டு வெற்றியீட்டிய உறுப்பினர்களின் பதவிப் பிரமாணம் தொடர்பில் விரைவில் அறிவிக்கப்படும் எனவும், கிளிநொச்சியில் பதவிப் பிரமாண நிகழ்வுகள் நடத்தப்படக் கூடிய சாத்தியம் காணப்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.



0 Responses to ராணுவ ஆட்சியை நிராகரித்துள்ள வடக்கு மக்கள்: மாவை