போலி பட்டா தயாரித்து நிலத்தை விற்பனை செய்ததாக முன்னாள் முதலமைச்சரும், தி.மு.க. தலைவருமான கருணாநிதி, முன்னாள் அமைச்சர் பரிதி இளம்வழுதி, மு.க.ஸ்டாலின் மகன் ஆகியோர் மீது சென்னை காவல்துறை ஆணையரிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
சென்னை, வில்லிவாக்கம் தர்மாதோப்பு அறக்கட்டளைக்குச் சொந்தமான நிலத்தை முறைகேடு செய்ததாக புகார் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இது தொடர்பாக அறக்கட்டளையைச் சேர்ந்த ரெங்கா ரெட்டி என்பவர் காவல் ஆணையரிடம் அளித்துள்ள புகாரில், அறக்கட்டளைக்குச் சொந்தமான 7 ஏக்கர் நிலத்தை பரிதி இளம்வழுதி உள்ளிட்டவர்கள் முறைகேடு செய்து மோசடி செய்துள்ளதாக தெரிவித்துள்ளார்.
அந்தப் புகார் மனுவில், முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் பேரன் உதயநிதியின் பெயரும் இடம்பெற்றுள்ளது. அவருக்கு உடந்தையாக இருந்ததாக கருணாநிதியின் பெயரையும் அவர் அதில் குறிப்பிட்டுள்ளார்.



0 Responses to கருணாநிதி, பரிதி இளம்வழுதி மீது நிலமோசடி புகார்