கொழும்பில் உள்ள மன நோயாளிகள் போர் பற்றி நூல்களை வெளியீடு செய்து வருவதாக முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.
போர் வெற்றி தொடர்பில் தங்களது பெயர்களை மகா வம்சத்தில் பொறித்துக் கொள்வதில் இவர்கள் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர்.
போர் வெற்றி நோக்க படையினரை வழி நடத்திய என்னை சிறையில் அடைத்து விட்டனர்.
போரில் முக்கிய பங்காற்றிய 20 க்கும் மேற்பட்ட ஜெனரல்கள் மற்றும் பிரிகேடியாகள் வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
படைவீரர்களுக்கு வழங்கப்பட்ட கொடுப்பனவுகள் நிறுத்தப்பட்டுள்ளன என அவர் தெரிவித்துள்ளார்.
யுத்த நீதிமன்றின் தீர்ப்பு தொடர்பான வழக்கு விசாரணைகளில் கலந்து கொண்டு திரும்பிய போது ஊடகவியலாளர்களிடம் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, யுத்த நீதிமன்றின் தீர்ப்பிற்கு எதிராக வழக்குத் தொடரப்பட்டுள்ளதே தவிர ஜனாதிபதிக்கு எதிராக அல்ல என சரத் பொன்சேகாவின் சட்டத்தரணி ரொமேஸ் டி சில்வா நீதிமன்றில் தெரிவித்துள்ளார்.
கொழும்பில் உள்ள மனநோயாளிகள், போர் பற்றி நூல்களை வெளியிடுகின்றனர்: பொன்சேகா
பதிந்தவர்:
ஈழப்பிரியா
02 August 2011



0 Responses to கொழும்பில் உள்ள மனநோயாளிகள், போர் பற்றி நூல்களை வெளியிடுகின்றனர்: பொன்சேகா