இலங்கை கொலைக் களம் (காணொளி) வீடியோதமிழ்ச் சங்கத்தில் ஞாயிறன்று திரை இடப்படுகிறது.பழ நெடுமாறன் சிறப்புரை ஆற்றுகிறார்.
2009 - ஆம் ஆண்டு இலங்கையில் தமிழர்களுக்கு எதிராக நடத்தப்பெற்ற இறுதிப் போரில் ஏறத்தாழ ஒன்றரை இலட்சம் மக்கள் இனப் படுகொலை செய்யப்பெற்றனர்.
குழந்தைகள், பெண்கள், முதியோர் என பலதரப்பு மக்கள் கொல்லப்பட்டனர் பாதுகாப்புவளைய முகாம்கள் மீது குண்டுகள், வீசப்பட்டன, மருத்துவமனைகள் மீது குண்டுமாரிகள் பொழியப்பட்டன. இலங்கை ராணுவம் செய்த இந்த இனப்படுகொலை போர்க்குற்றமாகுமென ஐ.நா வின் மூவர் குழு அறிவித்தது. இலங்கையில் நடைப்பெற்ற இனப்படுகொலைக்கு ஆதாரமான வீடியோ காட்சிகளை தொகுத்து சேனல் 4 என்கிற இங்கிலாந்து தொலைக்காட்சி காணொளி ஒன்றினை வெளியிட்டது. இந்த காணொளி காட்சிகளை ஐ.நா. ஆதராமாக எடுத்துக் கொண்டுள்ளது. உலக மனிதநேய இயக்கங்களை உலுக்கி எடுத்த இந்த காணொளி (வீடியோ) பெங்களூர்த் தமிழ்ச் சங்க்த்தில் ஞாயிறன்று திரை இடப் படுகிறது.
தமிழ் மொழியில் ம.தி.மு.க பொது செயலாளர் வை.கோ. அவர்கள் இக்காணொளியை தொகுத்து வழங்கியுள்ளார். 21.08.2011 மாலை 5.00 மணிக்கு இந்த காணொளி தமிழ்ச் சங்க திருவள்ளுவர் அரங்கில் திரை இடப்படுகிறது.
காணொளியைத் தொடர்ந்து இலங்கையின் மனித உரிமை மீறல்கள் குறித்து தமிழ் தேசிய இயக்கத் தலைவர் பழ நெடுமாறான் அவர்கள் சிறப்புரை ஆற்றுகிறார். போர்க்குற்றவாளி ராஜபட்சே மீது இந்தியா நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற தமிழ்நாடு சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்திற்கு எதிராக இலங்கை தெரிவித்துள்ள கருத்துக்களை கண்டித்தும், பேரறிவாளன் உள்ளிட்ட மூவரின் தூக்கு தண்டனை குறித்தும் கூட்டத்தில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட உள்ளன.
ERASU MARAN VICE PRESIDENTBANGALORE TAMIL SANGAM59 ANNASWAMY MUDALIAR ROAD, BANGALORE 560042
Ph: 09341315907 / 9480520588
E Mail - raasumaran@gmail.com
tamilsangam2011@gmail.com
0 Responses to "இலங்கையின் படுகொலைக் களம்" திரை இடப்படுகிறது - பழ நெடுமாறன் சிறப்புரை