மஹிந்த ராஜபக்ச'வை போர்க்குற்றவாளியாக அறிவிக்க வேண்டும் என்று, டெல்லியில், பாராளுமன்றம் அருகே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டு பேசுகையில் இந்திய அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.
இதில் யஷ்வந்த் சின்கா, ராம்விலாஸ் பஸ்வான் கலந்து கொண்டனர்.
இலங்கைக்கு மத்திய அரசு அளித்து வரும் ஆதரவை விலக்கி கொள்ள வேண்டும்.,
இலங்கை அரசை இன படுகொலை குற்றத்துக்கு உட்படுத்த வேண்டும்.,
இலங்கை அதிபர் ராஜபக்ச'வை போர்க்குற்றவாளியாக அறிவிக்க வேண்டும்
என்பது போன்ற கோரிக்கைகளை, ம.தி.மு.க. தலைவர் வைகோ வற்புறுத்தி வருகிறார்.
இந்த கோரிக்கைகளை வற்புறுத்தி நேற்று டெல்லியில் பாராளுமன்றம் அருகே ம.தி.மு.க சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் திரளான பெண்கள் பனர்களுடன் கலந்து கொண்டனர்.
ஆர்ப்பாட்டத்தில் வைகோ பேசுகையில்,
அவர், இலங்கையில் மனித உரிமை மீறல் நடந்து இருக்கிறது என்பது ஐ.நா. வெளியிட்ட அறிக்கை உறுதிப்படுத்துகிறது. அங்கு ஆயிரக்கணக்கான தமிழர்கள், இலங்கை இராணுவத்தால் 2009-ம் ஆண்டு கொல்லப்பட்டு இருக்கிறார்கள்.
இலங்கை அரசை மத்திய அரசு தட்டிக்கேட்க வேண்டும். இலங்கை அரசு மீது பொருளாதார தடையை விதிக்க வேண்டும். ராஜபக்சேவுக்கு பாடம் புகட்ட வேண்டும். அவரை நீதியின் முன் நிறுத்த வேண்டும். ராஜபக்ச'வை போர்க்குற்றவாளியாக அறிவிக்க வேண்டும்.
இலங்கை தமிழர் பிரச்சினையை ஐ.நா. சபையிலும், சர்வதேச மனித உரிமை கழகத்திலும் விவாதிக்க பிரதமர் மன்மோகன்சிங் வற்புறுத்த வேண்டும். இதற்கான நடவடிக்கை எடுக்காத பிரதமரை கண்டிக்கிறோம். மத்திய அரசு தனது மௌனத்தை கலைத்து செயல்பட வேண்டும்.
தமிழர்களை கொன்று குவித்த காரணத்துக்காக, இந்தியாவில் உள்ள இலங்கை தூதரை வெளியேற்ற வேண்டும். இலங்கை தமிழர்களின் நல்வாழ்வுக்கு, தமிழ் ஈழம்தான் நிரந்தர தீர்வு’’ என்று பேசினார்.
0 Responses to ராஜபக்ச'வை போர்க்குற்றவாளியாக அறிவிக்க வேண்டும்: வைகோ