இலங்கையருக்கு இந்தியாவின் எந்த மூலையிலும் எவ்விதமான பயிற்சியையும் வழங்கக் கூடாது. இந்நிலையில் தற்போது மத்திய அரசின் ரயில்பெட்டி தயாரிக்கும் தொழிற்சாலையில், பயிற்சி பெற்றுக் கொண்டிருக்கும் இலங்கை அதிகாரிகள் 12 பேரையும் இங்கிருந்து வெளியேற்றவேண்டும் என ம.தி.மு.க.பொதுச்செயலாளர் வைகோ வலியுறுத்தியுள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், சென்னை, வில்லிவாக்கத்தில் உள்ள மத்திய அரசின் பெரம்பூர் ரயில்பெட்டி தயாரிக்கும் தொழிற்சாலையில், இலங்கையைச் சேர்ந்த 12 இலங்கை அதிகாரிகளுக்கு உயர் தொழில்நுட்பப் பயிற்சி அளிப்பதை எண்ணி மிகுந்த வேதனையும், அதிர்ச்சியும் அடை ந்தேன். மத்திய காங்கிரஸ் அரசு தொடர்ந்து தமிழர்களுக்கு துரோகம் செய்வதையே தங்கள் அரசின் செயற்றிட்டமாக வைத்திருக்கிறது என்பது இதன்மூலம் தெளிவாகிறது.
எனவே, மத்திய அரசின் ரயில் பெட்டி தயாரிப்புத் தொழிற்சாலையில் இலங்கையருக்கு பயிற்சி அளிக்கக்கூடாது என்று வலியுறுத்தி ம.தி.மு.க.வினர் ஐ.சி.எப். தொழிற்சாலையை முற்றுகையிட்டு நேற்று முன்தினம் கண்டனப் போராட்டம் நடத்தினார்கள்.
7 கோடி தமிழர்கள் குடிமக்களாக இருக்கும் இந்தியாவின் எந்த மூலையிலும் இலங்கையருக்கு எந்தவிதமான பயிற்சியும் அளிக்கக்கூடாது என்பதோடு, அவர்க ளை உடனடியாக இந்தியாவை விட்டு வெளியேற்ற வேண்டும் என்று மத்திய அரசை வலியுறுத்துகிறேன் என்று தெரிவித்துள்ளார்.
0 Responses to இலங்கை அதிகாரிகளை வெளியேற்ற வேண்டும்: வைகோ