சென்னை மயிலாப்பூரில் நடந்த திமுக பொதுக்கூட்டத்தில் பேசிய திமுக தலைவர் கலைஞர்,
புதிய தலைமை செயலகத்தை மருத்துவமனை ஆக்கும் திட்டத்தை எதிர்க்கவில்லை. புதிதாக கட்டப்பட்ட சட்டமன்ற கட்டிடத்தை மாற்றி மருத்துவமனையாக ஆக்க போகிறோம் என்று, நான் கூட எண்ணிக்கொண்டிருந்தேன் இதை என்ன செய்யப்போகிறார்கள் என்று. இப்பொழுது தான் பதில் கிடைத்திருக்கிறது. அவர்களுக்கே பயன்படுவதற்காக மருத்துவமனையாக ஆக்கப்போகிறேன் என்று சொல்லியிருக்கிறார்கள்.
நான் சொல்ல விரும்புகிறேன். மருத்துவமனையாக ஒரு வீட்டை ஆக்குவது, ஒரு கட்டிடத்தை ஆக்குவது தவறு அல்ல. இன்னும் சொல்லப்போனால் இதற்கு நானே வழி காட்டியிருக்கிறேன். என்னுடைய ஆயுட்காலத்திற்கு பிறகு, நான் குடியிருக்கிற கோபாலபுரம் வீட்டை அறக்கட்டளை மூலமாக மருத்துவமனைக்கு கொடுக்கிறேன் என்று எழுதிக்கொடுத்திருக்கிறேன் என்றார்.
புதிய தலைமை செயலகத்தை மருத்துவமனை ஆக்கும் திட்டத்தை எதிர்க்கவில்லை: கலைஞர்
பதிந்தவர்:
Anonymous
19 August 2011
0 Responses to புதிய தலைமை செயலகத்தை மருத்துவமனை ஆக்கும் திட்டத்தை எதிர்க்கவில்லை: கலைஞர்