Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை அச்சுறுத்தி, அடிபணியச் செய்து தீர்வைத் திணிப்பதற்கு மகிந்த ராஜபக்ஸ முயற்சி செய்வதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராசா தெரிவித்துள்ளார்.

வரவுசெலவுத் திட்ட விவாதத்தின் இறுதி நாளான இன்று புதன்கிழமை (21.12.2011) நாடாளுமன்றத்தில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் தெரிவிக்கையில்,

அந்த முயற்சிக்கு ஒருபோதும் அடிபணிய மாட்டோம். இலங்கை அரசாங்கம் முழு நாட்டையுமே சிங்கள, பௌத்த, இராணுவ மயமாக்குவதற்கு முயற்சிக்கிறது என குறிப்பிட்டுள்ளார்.

தமிழர்களுக்கு சுயநிர்ணய உரிமையுடன் வாழும் நிலை தோற்றுவிக்கப்படாது போனால், எம்மை நாமே ஆள்வதற்காக நாங்கள் போராடுவோம் என்று அவர் மேலும் கூறியுள்ளார்.

முழு நாட்டையுமே நாம் ஆள வேண்டும் என்று கேட்கவில்லை. எமது பிரதேசத்தில் சுயநிர்ணய உரிமையுடன் வாழவே நாம் விரும்புகின்றோம் என தெரிவித்துள்ளார்.

அத்துடன் கிழக்கில் சபைகளுக்கான தேர்தலை பிற்போட்டுள்ளதற்கும் அரசாங்கத்தின் மீது மாவை சேனாதிராஜா குற்றம் சாட்டியுள்ளார்.

0 Responses to கூட்டமைப்பை அடிபணிய வைத்து தீர்வை திணிக்க மகிந்த முயற்சி: மாவை

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com