நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் விடுத்துள்ள அறிக்கையில், ’’முல்லைப் பெரியாறு அணைப் பிரச்சினையில் கேரள அரசின் அடாவடித்தனமான அரசியலால் தமிழ்நாட்டு மக்களின் வாழ்வாதாரம் பறிக்கப்பட்டுவிடுமோ என்கிற அச்சம் காரணமாகதான் உயிர் தியாகம் செய்வதாகக் கூறி, தேனி மாவட்டம், சின்னமனூரைச் சேர்ந்த ராமமூர்த்தி விஷம் அருந்தி உயிர் துறந்துள்ளார் என்ற செய்தி மிகுந்த மன வேதனையை அளிக்கிறது.
கொண்ட கொள்கைக்காக உயிரைத் துறப்பது என்பது தமிழினத்தின் தனித்தன்மையாகும். அவருக்காக வீரவணக்கம் செலுத்துகிறது நாம் தமிழர் கட்சி. கடந்த 19-ந்தேதி தேனியில் செயப்பிரகாசு என்று இளைஞர் தனது உடலில் தீயை மூட்டிக் கொண்டு உயிருக்குப் போராடிக் கொண்டிருக்கிறார்.
அவரைத் தொடர்ந்து கடந்த 22-ந்தேதி ராஜபாளையம் ஒன்றியம், சீலையம்பட்டியைச் சேர்ந்த தே.மு.தி.க. தொண்டர் சேகர் விஷம் அருந்தி உயிர் தியாகம் செய்துள்ளார். அவரைத் தொடர்ந்து இப்போது ராமமூர்த்தியும் உயிர் தியாகம் செய்துள்ளார்.
முல்லைப்பெரியாறு ஆற்று நீரை ஒருபோதும் இழந்து விடாதீர்கள் என்று தங்கள் இன்னுயிரை ஈந்து நமக்கு கட்டளையிட்டுள்ளார்கள். இந்த தியாகிகள். எனவே முல்லைப் பெரியாறு அணை போராட்டத்தில் நாம் வென்றே தீரவேண்டும்.
நம் போராட்டம் தீ பற்றி எரியலாம் தவிர, போராளிகள் எரிந்து விடக்கூடாது. எதற்காக உயிரைத் துறக்க வேண்டும்? முல்லைப்பெரியாறில் நம் உரிமையை பறித்து நம் மக்களின் வயிற்றில் அடிக்க முற்பட்டுள்ள கேரள அரசியல்வாதிகளுக்கு பதிலடி கொடுத்துக் கொண்டிருக்கிறோம்.
இங்கிருந்து செல்லும் பொருட்கள் பெருமளவிற்கு தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது. மாற்று அணைத் திட்டத்தை கை விடும்வரையும், முல்லைப் பெரியாறு அணையில் 142 அடிக்கு நீர் தேக்கும் வரை நமது போராட்டம் தொடரும்.
அப்படிப்பட்ட போராட்டத்தில் தொடர்ந்து பங்கேற்று வலிமை சேர்க்கவே இளைஞர்கள் தயாராக வேண்டுமே தவிர யாரும் உயிரை இழக்க வேண்டியதில்லை.
உயிரைக்காக்கவே நாம் போராடுகிறோம். அதற்கு உயிரைத் தியாகம் செய்யத் தேவையில்லை. உணர்வுடன் நின்று போராடினாலே நம் உரிமையைச் வென்றேடுத்து விடமுடியும்’’ என்று கூறியுள்ளார்.
வீரமும் அர்ப்பணிப்பும் கொண்ட தமிழ் நெஞ்சங்களே போராட்டக்களத்தில் உயிர்த்தியாகம் செய்வதுதான்
உண்மையான உயர்ந்த வீரமும் தியாகமுமாகும் . ஆர்ப்பாட்டம் , உண்ணாவிரதம் ,கடையடைப்பு , என்பன
மக்களின் ஏகோபித்த உணர்வையும் , எண்ணத்தையும் அதிகாரவர்க்கத்துக்கு அறைந்து சொல்வதற்கான
அஹிம்சை வழியிலான முதற்கட்ட செயற்பாடுகள். அஹிம்சை வன்முறைமூலம் அடக்கப்பட்டுத்
தோற்கடிக்கப் படும்போதுதான் இம்சை வழியிலான நடைமுறைச் சிந்தனைகள் தலையெடுக்கும்
அப்படி ஒரு நிலை தோன்றினால் ஆயுதம் ஏந்தும் முன்னிலைப் போராளிகளாக, உதாரண புருசர்களாக
களத்தில் குதியுங்கள். அதுவே புனிதமான ஒரு தியாகப் போராளிக்குரிய இலக்கணம்.
தயவு செய்து அர்த்தமில்லாத வெறும் தற்கொலை நடவடிக்கைகளில் ஈடுபடாதீர்கள். உங்கள் மரணங்கள்
சரித்திரம் படைக்க வேண்டும், வெறும் சம்பவமாய் இருக்கக்கூடாது .