Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

கடந்த வாரம், தங்காலை பிரதேசத்தில் பிரித்தானிய பிரஜையை படுகொலைசெய்த சம்பவம் தொடர்பில் மேலும் மூவர் சரணணடைந்திருப்பதாகத் தெரிவிக்கப்படும் அதே வேளை, இச் சம்பவம் தொடர்பில் மேற்கொள்ளப்படும் விசாரணைகளில் குற்றவாளிகள் தப்பிக்கும் வகையில் நடவடிக்கைகள் சில மேற்கொள்ளப்படுவதாக சட்டத்திற்கு கீழ்படிவான தங்காலை பிரஜைகள் அமைப்பு சந்தெகம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக அவ்வமைப்பு, பிரித்தானிய உயர்ஸ்தானிகராலயம், ஹம்பாந்தோட்டை பாராளுமன்ற உறுப்பினர்கள், கட்சிகளின் செயலாளர்கள் உள்ளிட்டோருக்கு எழுதிய முறைப்பாட்டில், மேற்படி கொலைச் சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேக நபரான தங்காலை பிரதேச சபைத் தலைவர் பலமான அரசியற் பின் புலம் மிக்கவர் என்ற வகையில், இது தொடர்பான விசாரணைகளில் குற்றவாளிகளை தப்பிக்கும் வகையிலான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாக சந்தேகம் கொள்ள வேண்டியுள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளதாக அறிய வருகிறது.

சம்பவம் இடம்பெற்ற சுற்றுலா விடுதி நிர்வாகம் காவல்துறையினருக்கு அளித்தவாக்கு மூலத்தில் மாற்றங்களை ஏற்படுத்தி, பிரதேச சபைத் தலைவரை காப்பாற்ற சிலதரப்பினரால் தீவிர முயற்சி எடுக்கப்பட்டு வருவதாகவும், குறித்த சந்தேக நபருக்கு எதிராக கடந்த காலங்களிலும் பல்வேறுகுற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டுள்ளதாகவும் இந்த முறைப்பாட்டில் குறிப்பிடப்பட்டுள்ளதாக அறியப்படுகிறது. பிரதான குற்றவாளியாக சந்தேகிக்கப்படும் தங்காலைப் பிரதேசச் சபைத் தலைவர் சிறிலங்கா ஜனாதிபதி குடும்பத்தினருக்கு நெருக்கமானவர் என ஏற்கனவே தகவல்கள் வெளியாகியிருந்தநிலையில், இந்த முறைப்பாடு எழுந்திருப்பது குறிப்பிடத்தக்கது.

இதேவேளை இது தொடர்பிலான உரிய விசாரணைகள் முறைப்படி நடைபெறும் என பாதுகாப்புச் செயலர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும் அறிய வருகிறது. இந்த விசாரணைகளை இலங்கையில் உள்ள பிரித்தானியத் தூதரகம் நன்கு அவதானித்துவருவதாக அதிர்வு இணயம் மேலும் அறிகிறது.

0 Responses to பிரித்தானிய பிரஜை கொலை: சிக்கிய மகிந்தர் நண்பனைக் காப்பாற்ற முயற்ச்சி!

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com