சிங்களவர்கள் மோடையர்கள் எனச் சொல்லிச் சொல்லியே தமிழர்கள் தோல்வியின் விழிம்பில் உள்ளனர் என்பது ஒரு கசப்பான உண்மை ! இதனைப் புத்திஜீவிகள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுவார்கள். சில வருடங்களாக சிங்களப் புலனாய்வு செயல்பட்டு வரும் விதம் மிதமிஞ்சிய வகையில் அமைந்துள்ளது. அந்த வகையில் புலம்பெயர் தமிழ் மக்கள் சற்றும் எண்ணிப் பார்க்க முடியாத அளவு அவர்கள் ஊடுருவல் எம் மத்தியில் இருப்பது தற்போது வெளிச்சத்துக்கு வந்துள்ளது. இதனை வாசிக்கும்போது உங்களுக்கான தெளிவு கிடைக்கும் என நான் நம்புகிறேன். சரி வாருங்கள் மேட்டருக்குள் போகலாம் !
1998ம் ஆண்டு தேசிய தலைவர் மேதகு வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்களால் சுவிஸ் இளையோர்களுக்கு சொல்லப்பட்ட விடையம் ஒன்று இருக்கிறது. அதாவது புத்தாண்டில் புதிதாக நாம் மலர்வோம் என்பதாகும். அன்று தொட்டு அவர்கள் 13 வருடமாக புத்தாண்டு நிகழ்வுகளைக் கொண்டாடி வருகின்றனர். இதனைக் குழப்பும் நடவடிக்கையில் இலங்கை அரசின் புலனாய்வுப் பிரிவினர் தற்போது முழு அளவில் ஈடுபட்டு வருகின்றனர். இதன் எதிரொலிதான் அங்கே தற்போது நடக்கவிருக்கும் போட்டி நிகழ்வாகும். இதற்கு யார் சரியான ஆள் எனத் தேடியலைந்த இலங்கை தற்போது ஒருவரை களமிறக்கியுள்ளது. இந் நபர் தமிழ் நாட்டில் உள்ள பாடகர் கிருஷ் என்பவரையும் அவர் மனைவியான நடிகை சங்கீதாவையும் சுவிசுக்கு வருமாறு அழைத்துள்ளார். அவர்கள் வந்தால் கூட்டம் அலைமோதாது என்று அறிந்த ஏற்பாட்டாளர்கள் நடிகர் ஜீவாவையும் அவர் மனைவியையும் சேர்த்து அழைத்துவருமாறு பாடகர் கிரிஷிடம் கூற அவரும் அதற்கு சம்மதித்துள்ளார்.
தமிழ் இளையோர்கள் மற்றும் சுவிஸ் தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவால் நடத்தப்படும் புத்தாண்டு நிகழ்வுக்கு எதிர் நிகழ்ச்சியாக பாடகர் கிருஷ் களமிறக்கப்படுகிறார். ஈழத்தில் மாவீரர் சின்னங்களை அழித்தார்கள், அவர்கள் உடல்களைக் புல்டோசர் கொண்டு கிளறிப்போட்டார்கள். ஏன் எனில் ஈழத்து மக்கள் மனதில் இருந்து புலிகளை அகற்றவேண்டும் என்பதற்காக. தற்போது வெளிநாடுகளில் உள்ள தமிழர்கள் தேசிய தலைவர் பிரபாகரன் அவர்களை மறக்கவேண்டும் ! அவரால் முன்மொழியப்பட்ட இந்த விழாவைக் குலைக்க என்ன வேண்டும் என்றாலும் செய்ய இலங்கை அரசு தயார் என்ற நிலை சுவிஸ் நாட்டில் தோன்றியுள்ளது. இது சுவிஸ் நாட்டில் மட்டும் தானே நடக்கிறது எமக்கு என்ன எனப் பிறநாட்டு மக்கள் நினைக்கவேண்டாம். உங்கள் நாடுகளிலும் இவை நடக்க இருக்கிறது என்பதே உண்மையாகும். இனி மாவீரர் தின நிகழ்வுகள் நடக்கும் நேரத்தில் பக்கத்து இடத்தில் நடிகை "நமீதா" ஆடும் நிகழ்வு கூட நடக்கலாம். அந்த இடம் களைகட்டலாம். யார் அறிவார்கள் ?
இலங்கை அரசின் முதலாவது திட்டம்:
வட-கிழக்கில் சாதூரியமாக பல களியாட்ட நிகழ்வுகளை நடத்தி இளைஞர்களை திசைதிருப்பியுள்ள இலங்கை புலம்பெயர் தமிழ் மக்களை திசை திருப்ப முடியாமல் திண்டாடி வருகிறது. இப்படியே விட்டால் அவர்கள் தொடர்ந்தும் போர் குற்றம் இன அழிப்பு மகிந்தருக்கு எதிராக வழக்கு என தமது பாதையில் செல்வார்கள். அவர்களுக்கும் தென்னிந்திய மோகத்தை ஏற்படுத்தவேண்டும் அல்லவா ? அதற்கு நல்லதொரு திட்டம் என்ன தெரியுமா ? சினிமா மோகத்தை வளர்ப்பது ! களியாட்ட நிகழ்வுகளை நடத்துவது ! கலாச்சார நிகழ்வுகள் என்ற போர்வையில் நடிகைகளைக் களமிறக்குவது எனப் பட்டியல் நீண்டுகொண்டே போகிறது. ஓய்வு கிடைக்கும் நேரத்தில் நிகழ்ச்சிகளுக்குச் சென்றால் தமிழ் மக்கள் எங்கே போர் குற்றம் தொடர்பாக யோசிக்கப்போகிறார்கள் ? இதனை வைத்தே இலங்கை அரசு தப்பிவிடலாம் அல்லவா. இதனால் தென்னிந்திய நடிகைகளை வைத்து நிகழ்ச்சிகளை நடத்த இலங்கை அரசு ஏற்பாட்டாளர்களுக்கு உதவியும் வருகிறது. அந்தந்த நாடுகளில் உள்ள இலங்கைத் தூதரகங்கள் இதற்கான பண உதவிகளையும் செய்து இதனை ஊக்குவித்து வருகிறது என்பதே உண்மையாகும்.
சுவிஸ் நாட்டில் நடப்பது என்ன ? இது எவ்வாறு மற்றைய நாடுகளை பாதிக்கும் ?
சிவிஸ் நாட்டில் 1ம் திகதி நடக்கவிருக்கும் புத்தாண்டு நிகழ்வு தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவால்(STCC) கடந்த 13 வருடமாக நடத்தப்பட்டு வருகிறது. இந்த நிகழ்வைக் குழப்ப தற்போது தென்னிந்திய நடிகைகள் நடிகர்கள் மற்றும் பாடகர்களைக் களமிறக்குகிறார்கள் சிலர். இவர்களும் அதே நாளில்(01.01.2012) அன்று போட்டி நிகழ்வுகளை நடத்துகிறார்கள். இதனூடாகக் கட்டமைப்பை உடைப்பது இவர்களின் முதல் கட்ட நடவடிக்கையாகும். இதனை நாம் உற்று நோக்கினால் இது 2009ம் ஆண்டுக்குப் பின்னர் தான் நடக்கிறது என்பது தெளிவாகப் புலனாகிறது. இந்தப் போட்டி விழாவை நடத்துபவர்கள் ஏன் 2009ம் ஆண்டுக்கு முன்னர் இதனை நடத்தவில்லை ? புலிகள் யுத்தரீதியாக தோற்றதன் பின்னர் ஏன் இதனை நடத்தவேண்டும் ? இக் கேள்விகளுக்கு அவர்களால் பதில் கூற முடியாது. லண்டனில் மாவீரர் தினத்தை இரண்டாக நடத்தி மக்களை உடைத்த அதே பின்னணி தற்போது சுவிஸ் நாட்டிலும் தமது வேலைகளைக் காட்ட ஆரம்பித்துள்ளனர்.
இது ஒரு புற்றுநோயைப் போல பல நாடுகளிலும் பரவி இறுதியில் தமிழர்களின் ஒற்றுமையைக் குலைத்து புலம்பெயர் தமிழ் மக்களின் பலத்தை முற்றாகச் சிதைத்துவிடும். சுவிசில் நடக்கும் இந்த மக்கள் சிதைப்பு நிகழ்வுக்கு லண்டனில் இருந்து ஆதரவு கொடுக்கிறார் ஐ.பி.சி வானொலி ஏகபோக உரிமையாளர் "சத்தி" அவர்கள். லண்டனில் இவர் ரேடியோவைக் கேட்ப்பவர்களே 100 பேர் தான். ஆனால் இவர் தற்போது சுவிஸ் நிகழ்வுகளை பயன்படுத்தி அதில் எரியும் நெருப்பிலும் சூடு காய முனைகிறார். பாடகர் கிருஷ் அவர்களைக் கைகளில் போட்டுக் கொண்டு அவரின் நேர்காணலைப் போட்டு பரபரப்புத் தேட முனைகிறார். ஒருவகையில் "சத்தி" எனப்படும் இந்த நபர் மிகவும் பாவம். மனநிலை குன்றிவர்களுக்கே விளங்கும் சில விடையங்கள் இந்த மனிதருக்கு விளங்குவது இல்லைப் போலும் ! இவர் தெரிந்துதான் சில காரியங்களைச் செய்கிறாரா இல்லை தெரியாமல் செய்கிறாரா என்று மக்களுக்கு மட்டுமல்ல அவருக்கே தெரியாது.
இதனை நாம் எழுதிவிட்டதால் இனி ஐ.பி.சி வானொலிச் செய்தியில் அதிர்வு பற்றி பல விமர்சனங்கள் வரும். அதனையும் நாம் முன்கூட்டியே சொல்லிவிடுகிறோம். இவ்வளவும் நடக்கிறதே GTV ஊடகம் எந்தப் பக்கம் நிற்கிறது என்று நீங்கள் கேட்ப்பீர்கள் அல்லவா ? அட போங்கள் ! இந்த மக்கள் சீர் குலைப்பு நிகழ்வின் அறிப்பாளர்களே GTV யில் இருந்துதான் செல்கிறார்களாம் என்பது அவர்கள் அடித்த போஸ்டரைப் பார்த்தால் தெரிந்துவிடும். இவர்கள் அனைவரும் யார் நிகழ்ச்சி நிரலின் கிழ் உள்ளார்கள் என்பதனை மக்கள் நன்கு அறிந்துகொள்ளவேண்டும். சுவிஸ் வாழ் தமிழ் மக்கள் ஈழப் போராட்டத்துக்கு அளித்த பேராதரவு போல உலக நாடுகளில் உள்ள எந்த ஒரு தமிழ் மக்களும் அளித்திருக்க மாட்டார்கள் என்று சொல்லுவார்கள். அவர்கள் தமது சரியான தலைமையை அடையாளம் காணவேண்டும். சுவிஸ் நாட்டில் பல காலமாக இயங்கிவரும் (TCC) தமிழர் ஒருங்கிணைப்புக் குழு சிதைக்கப்படுவதை தமிழ் மக்கள் ஒருபோதும் அனுமதிக்க மாட்டார்கள்.
எனவே எமது போராட்டம் நேரான வழியில் செல்ல புல்லுருவிகளை சுவிஸ் வாழ் தமிழ் மக்கள் அடையாளம் கண்டு ஒதுக்கவேண்டும் ! எமது தேசிய தலைவர் மீது பற்றுள்ள அனைத்துத் தமிழர்களும் ஒரே வழியில் நின்று தேசிய தலைவரால் நெறிப்படுத்தப்பட்ட சுவிஸ் தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவினருக்கு பக்கபலமாக இருக்கவேண்டும் ! அதுவே எமது விடுதலைக்கு வித்திடும். இறந்த மாவீரர்களின் கனவுகளை நனவாக வழிசமைக்கும் !
அதிர்வு
வல்லிபுரத்தான்.
Swiss Povom - Interview Sangeetha Krish
தமிழர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்காத சங்கீதா - கிரிஷ் துக்கடாக்களின் திமிர் பேட்டி (காணொளி இணைப்பு)
மண்ணைக் கிளரி மாவீரரின் கல்லரைகளை உடலங்களை அழிக்கலாம், ஆனால் எம் இதயத்துள் நாம் போற்றிப் பாதுகாக்கும் மாவீரரின் உருவங்களையோ கல்லரைகளையோ சிங்களக் கடையர் கொலைவெறியர் கூட்டத்தால் என்ன செய்ய முடியும்? எங்கே செய்து பார்க்கட்டும்.
so ur guys want to become leaders of forgin tamils.
before 2009 IBC and GTV ( TTN, Thrisanam and Thenral)most importent for u now not (2011.That mean After 2009 no more LTTE, than u can talk what u wants. Thanks for ur comment.(tamilan nadathum ella udakamum unkal kadupaaduku varathu)apadi varatha udakam ellam kudaathu.muthalla neekal jaar enru makalluku solungo ppls.