Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

இந்திய விமானப் படையில் உள்ள மிராஜ்-2000 ரக போர் விமானங்களில் பயன்படுத்துவதற்காக ரூ. 6,600 கோடி செலவில் 490 நவீன ஏவுகணைகளை இந்தியா வாங்கவுள்ளது.

பிரான்ஸ் நாட்டின் டஸ்ஸால்ட் ஏவியேசன் (Dassault Aviation) நிறுவன தயாரிப்பு தான் மிராஜ்-2000 போர் விமானங்கள். பல ஆண்டுகளாக இந்திய விமானப் படையில் பயன்பாட்டில் உள்ள இந்த விமானங்கள் எதிரி நாட்டு விமானங்களை நடுவானில் வழி மறிப்பது, குறைந்த உயரத்தில் பறந்து எதிரிகளின் ரேடார்களில் கண்ணில் படாமல் இலக்கை தாக்குவது, எதிரி நாட்டின் ரேடார்களையே jam செய்து செயலிழக்கச் செய்வது உள்ளிட்ட திறன்களைக் கொண்டது.

இந்தியாவிடம் இந்த ரகத்தைச் சேர்ந்த 51 விமானங்கள் உள்ளன. இவை இப்போது ரூ. 10,947 கோடி செலவில் நவீனப்படுத்தப்பட்டு வருகின்றன.

அத்தோடு இந்த விமானங்களில் நவீன ஏவுகணைகளையும் பொறுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்காக தனியாக ரூ. 6,600 கோடி செலவில் 490 ஏவுகணைகள் பிரான்ஸ் நாட்டின் தேல்ஸ் (Thales) நிறுவனத்திடம் வாங்கப்படவுள்ளன.

இந்த ஏவுகணைகள் எதிரி நாட்டு விமானங்களை விரட்டிச் சென்று தாக்கி அழிக்கும் திறன் கொண்டவை.

இந்திய விமானப் படையில் உள்ள மிகச் சிறந்த விமானங்களில் ஒன்றான மிராஜ்-2000 விபத்துகளை அதிகம் சந்திக்காத விமானமாகும்.

இது தவிர சுவிஸ் நாட்டிடம் இருந்து ரூ. 3,000 கோடி செலவில் 75 பிலேடஸ் PC-7 ரக பயிற்சி விமானங்களையும் வாங்க இந்தியா முடிவு செய்துள்ளது. இப்போது இந்திய விமானப் படையில் உள்ள HPT-32 ரக பயிற்சி விமானங்கள் மிகவும் பழசாகிவிட்டன. இதில் அவ்வப்போது என்ஜின் கோளாறுகள் ஏற்பட்டு பயிற்சியும் பாதிக்கப்பட்டு வருவதால், பிலேடஸ் விமானங்களை வாங்க திட்டமிடப்பட்டுள்ளது.

இதற்கான அனுமதியை பிரதமர் மன்மோகன் சிங் தலைமையிலான, பாதுகாப்புத்துறைக்கான அமைச்சரவைக் குழு நேற்று அளித்தது.

இந்த விமானங்கள் தவிர ரேடார்களின் கண்ணில் படாமல் தப்பிக்கும் திறன் கொண்ட அதிநவீன 5ம் தலைமுறை போர் விமானங்கள் ரஷ்யாவுடன் சேர்ந்து இந்தியா தயாரித்து வருகிறது. இதன் தயாரிப்புப் பணிகள் 2020ம் ஆண்டில் முடிவடையும். அப்போது சுமார் 1.5 லட்சம் கோடி ரூபாய் செலவில் 300 விமானங்களை ரஷ்யாவிடமிருந்து இந்தியா வாங்கவுள்ளது.

0 Responses to பிரான்சிடம் ரூ.6,600 கோடியில் 490 அதிநவீன விமான ஏவுகணைகளை வாங்கும் இந்தியா!

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com