தமிழினத்ததின் வாழ்வில் புதியதோர் மாற்றத்தை தோற்றுவிக்க புது வருடம் வழிவகுக்க வேண்டுமென்று தமிழீழ விடுதலை இயக்கம் (ரெலோ) தலைவரும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமாகிய செல்வம் அடைக்கலநாதன் புது வருட வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார்.
புதுவருட வாழ்த்துச் செய்தியில் மேலும் தெரிவிக்கபப்பட்டுள்ளதாவது,
எமது மக்களின் ஜனநாயக ரீதியிலான போராட்ட வாழ்வியல் ஒரு போதும் தோற்கடிக்கப்படவில்லை. இறுதி யுத்தம் முடிவுக்கு கொண்டு வரப்பட்டுள்ள போதிலும் எமது மக்களுக்கான அரசியல் தீர்வு இது வரை முன்வைக்கப்படாத நிலைமையே காணப்படுகின்றது.
எனவே, ஜனநாயக ரீதியிலான அரசியல் போராட்டத்தை முன்னெடுக்க வேண்டிய நிலைமைக்கு நாம் தள்ளப்பட்டுள்ளோம். இந்த நிலைமைகளை முற்றாக மாற்றியமைத்து நியாயமான நீதியான நேர்மையான அரசியல் தீர்வுக்கு வழிவகுக்க இப்புத்தாண்டில் வழியேற்படுத்த முடியும்.
அகதி வாழ்வின் துயரம், விதவைகளின் கொடுரம், அனாதைக் குழந்தைகள் என்ற கொடிய துயரம்,இடம் பெயர் வாழ்வின் பெரும் துயரம் இனியொருபோதும் எமக்கு வேண்டாம். இவற்றிற்கு முடிவு கட்ட புது வருடம் வழிவகுக்க வேண்டுமென்று அனைவரும் ஒன்று பட்டு பிரார்த்திப்போம்.
-கடந்த மூன்று தசாப்த காலத்திற்கும் மேற்பட்ட கொடுர யுத்தத்தில் மிகப்பெரும் கொடிய துயரங்களை எதிர்கொண்ட எமது மக்களுக்கு நேர்மையானதும் நீதியானதும் உறுதியானதுமான அரசியல் தீர்வு ஏற்பட புத்தாண்டில் வழி பிறக்கும் என உறுதியுடன் நம்புகின்றோம்.
எமது ஜனநாயக அரசியல் மக்கள் செயற்பாடுகளை தொடர்ந்தும் முன்னெடுக்க நாம் அனைவரும் ஒன்று பட்டு பிரார்த்திப்போம் என செல்வம் அடைக்கலநாதன் தனது வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார்.
தமிழினத்தின் வாழ்வில் புதியதோர் மாற்றம் ஏற்பட இப்புத்தாண்டில் வழிபிறக்கும்: செல்வம்
பதிந்தவர்:
தம்பியன்
01 January 2012
0 Responses to தமிழினத்தின் வாழ்வில் புதியதோர் மாற்றம் ஏற்பட இப்புத்தாண்டில் வழிபிறக்கும்: செல்வம்