Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

சென்னையில் நக்கீரன் அலுவலகம் மீது தாக்குதல் நடந்த சம்பவத்திற்கு, விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவரும், சிதம்பரம் நாடாளுமன்றத் தொகுதி உறுப்பினருமான தொல்.திருமாவளவன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

சிதம்பரத்தில் செய்தியாளர்களிடம் பேசிய தொல்.திருமாவளவன்,

சென்னையில் உள்ள நக்கீரன் அலுவலகத்தை அதிமுகவினர் அணி அணியாக சென்று தாக்குதல் நடத்தியிருப்பது கடும் கண்டனத்துக்குரியது.

தன்னைப் பற்றி செய்தி வெளியிட்டதற்காக அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா அவர்கள் கண்டன அறிக்கை வெளியிட்டிருக்கலாம் அல்லது சட்டப் பூர்வமாக இதனை சந்தித்திருக்கலாம். அதைவிடுத்து பத்திரிகை அலுவலகத்தை தாக்கியிருப்பது ஜனநாயகத்திற்கு விரோதமான செயல் என்றார்.

0 Responses to நக்கீரன் அலுவலகம் மீது தாக்குதல்! திருமாவளவன் கடும் கண்டனம்!

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com