Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

ஐ.நா மனித உரிமை பேரவையின் 19வது கூட்டத் தொடர் எதிர்வரும் பெப்ரவரி 27ம் நாள் முதல், நான்குவார காலங்களுக்கு இடம்பெறவுள்ள நிலையில், நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் நீதிக்காய் ஒன்றிணைவோம் எனும் மாபெரும் மக்கள் எழுச்சி நிகழ்வொன்றினை ஏற்பாடு செய்துள்ளது.

தமிழர்கள் மீதான சிறிலங்கா அரசாங்கத்தின் போர்குற்றங்கள், மானிடத்துக்கு எதிரான குற்றங்கள், இனப்படுகொலை தொடர்பில், சுயாதீன சர்வதேச விசாரணைப் பொறிமுறை ஒன்றிணை உருவாக்குமாறு, உலகெங்கும் குரல்கள் மேலெழுந்து வரும் நிலையில், நீதிக்காய் ஒன்றிணைவோம் எனும் மாபெரும் மக்கள் எழுச்சி நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

ஆரம்பமாகவுள்ள ஜெனீவா மனித உரிமைப் பேரவையின் கூட்டத் தொடர், சிறிலங்கா அரசாங்கத்துக்கு கடும் நெருக்கடியை கொடுக்கும் எதிர்பார்க்கப்பட்டும் நிலையில், ஜெனீவா மனித உரிமைக் கூட்டத் தொடரில், நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதிநிதிகளும் கலந்து கொள்கின்றனர்.

தமிழர்களின் நியாயமாக போராட்டத்தினை சர்வதேச நாடுகளுக்கும், மனித உரிமை அமைப்புகளுக்கும், இராஜதந்திரிகளுக்கும், ஐ.நா அதிகாரிகளுக்கும் நா.த.அரசாங்கத்தின் பிரதிநிதிகள் முன்வைக்கும் சமவேளை, ஐ.நா முன்றில் மேற்கொள்ளப்படும் மக்கள் எழுச்சி நிகழ்வு, தமிழர் தரப்பின் செயற்பாடுகளுக்கு வலுவூட்டுவதாக அமையும்.

இந்நிலையில், ஏற்பாடு செய்யப்பட்டுள்ள நீதிக்காய் ஒன்றிணைவோம் மாபெரும் மக்கள் எழுசி நிகழ்வு குறித்து, நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் ஜெனீவா செயலகம் செய்திக்குறிப்பொன்றினை விடுத்துள்ளது.

ஐ.நா மனித உரிமைக் கூட்டத் தொடர் ஆரம்பமாகின்ற நாளான, பெப்ரவரி 27ம் திகதி மதியம் 14 மணிக்கு, இவ் எழுசி நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அனைத்துலக விசாரணைக்களுக்குரிய ஆண்டாக செயற்படுவோம், மக்கள் போராட்டங்களை வலுப்படுத்துவோம் எனும் உறுதியோடு, அனைத்து தமிழர் அமைப்புக்களும் மக்களை அணிதிரட்டி நீதிக்காய் ஒன்றுபடுவோம் என செயலக செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சுவிசின் அனைத்து மாநிலங்களில் இருந்தும் வாகன ஏற்பாடுகள் செய்யப்படுவதோடு, ஐரோப்பாவின் பிற நாடுகளில் இருந்தும் போக்குவரத்துக்கு ஏற்பாடுகள் செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


0 Responses to ஜெனீவா ஐ.நா முன்றலில் நீதிக்காய் ஒன்றிணைவோம்: தமிழீழ அரசாங்கம் அழைப்பு

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com