Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

லிபியாவில் ஆயுதம் ஏந்திய குழுக்களிடையே தற்போது பயங்கரமான மோதல்கள் ஆரம்பித்திருக்கிறது. நேற்று முன்தினம் தலைநகர் திரிப்போலியில் நடைபெற்ற துப்பாக்கி மோதலில் நான்கு போராளிகள் கொல்லப்பட்டனர். கடாபியை அகற்றப் போராடிய இவர்கள் இப்போது அதிகாரத்திற்காக அடிபட ஆரம்பித்துள்ளார்கள்.

மேலும் ஒழுங்கு கட்டுப்பாடு எதுவுமற்ற லிபிய ஆயுதம் தாங்கிய குழுக்கள் இப்போது தமக்குள் மோதலை ஆரம்பித்திருப்பது புதுமையான ஒன்றல்ல, இதற்கான பதட்டம் கடந்த பல மாதங்களாகவே நிலவி வருகிறது. பல்வேறு கருத்துக்களை கொண்ட ஆயுதக்குழுக்கள் ஆளையாள் ஆயுதங்களை தூக்கியபடியே ஆங்காங்கு கப்பமும் கட்டப்பஞ்சாயத்துமாக காலம் ஓட்டி வருகிறார்கள்.

லிபியாவில் கடாபி இருந்தபோது கடாபியின் இராணுவம் பொது மக்களுக்கு பாரிய ஆபத்தாக விளங்கியது. இப்போதோ ஆயுதமுள்ள அனைவருமே சமுதாய விரோதிகளாகி ஒட்டுமொத்த லிபிய சமுதாயத்திற்கே பேராபத்தாக மாறியிருக்கிறார்கள் என்றும் ஐரோப்பிய செய்திகள் தெரிவிக்கின்றன. இப்படிச் செய்வதும், சமூக அமைதிக்கு பங்கம் விளைவிப்பதும் பொறுப்பற்ற செயல் என்று இராணுவ தலைமைப் பிரிவைச் சேர்ந்த ஜெனரல் அப்டுல் ஹக்கீம் பெல்காம் கூறினார். இதுபோல இன்னொரு மோசமான மோதல்; சிரியாவில் நடைபெற்றுள்ளது.

சிரிய அரச படைகள் தங்களுக்குள் ஆளையாள் மோதலை நடாத்தி மொத்தம் 18 பேரை கொன்று தள்ளியுள்ளார்கள். சிரிய இராணுவம் பிளவுபட்டு யார் நமது பக்கம், யார் போராட்டக்காரர் பக்கமென தெரியாது குழம்பி வருகிறது. சிரிய – ஜோர்டான் எல்லைப் பகுதியில் இது நடந்துள்ளது.

0 Responses to லிபியாவிலும் ஆயுதக்குழுக்களிடையே மோதல் ஆரம்பித்தது

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com