இன்று புத்தாண்டு தினமன்று ஜப்பானை 7 மேக்னிடியூட் அளவிலான பாரிய நிலநடுக்கமொன்று
தாக்கியுள்ளது. பசுபிக் சமுத்திரத்தில் டோரிஷிமா மற்றும் Izu தீவுகளுக்கு அருகாமையிலும் டோக்கியோவிலிருந்து 600 கி.மீ தொலைவிலும், கடல் மட்டத்திலிருந்து 348.5 கி.மீ ஆழத்திலும் இந்நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
ஜப்பானிய நேரம் நண்பகல் 2.27 மணியளவில் இந்நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இதனால் சுனாமி ஏற்பட கூடிய வாய்ப்பு இல்லை என அறிவிக்கப்பட்ட போதும் டோக்கியோவில் கட்டிடங்கள் சில அதிர்வடைய்ந்துள்ளன. மத்திய - வடக்கு எக்பிரஸ் ரயில்கள் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டு பின்னர் மீண்டும் சேவயை தொடங்கியுள்ளன.
அணு உலைகளுக்கு சேதங்கள் ஏற்பட்டதாக தகவல் ஏதும் வெளிவரவில்லை. கடந்த 2011 ம் வருடம் மார்ச் 11 ம் திகதி ஜப்பானை தாக்கிய நிலநடுக்கத்தினால், 20,000 ற்கு மேற்பட்டோர் உயிரிழந்து அல்லது காணாமல் போயிருந்தது குறிப்பிடத்தக்கது.
பசுபிக் சமுத்திரத்தின் நெருப்பு வளையம் (Ring Of Fire) பகுதியில் ஜப்பான் நிலைகொண்டிருப்பதால், உலகின் கடல்கோள் அனர்த்தங்கள் அதிகமாக நிகழும் நாடுகளும் நாடுகளில் ஒன்றாக ஜப்பான் இருப்பது குறிப்பிடத்தக்கது.
0 Responses to புத்தாண்டு தினத்தில் ஜப்பானை தாக்கியது நிலநடுக்கம்