ஈரானுக்கு எதிரான புதிய தடைகளை உள்ளடக்கிய அந்நாட்டின் பிரதான பாதுகாப்பு சட்ட மூலத்தை சட்டமாக மாற்றுவதற்கான ஆவணத்தில் அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா கைச்சாத்திட்டுள்ளார்.
இந்த சட்டமானது ஈரானிய மத்திய வங்கியுடன் வர்த்தகத்தில் ஈடுபட்டு வரும் வெளிநாட்டு நிறுவனங்களுக்கான அமெரிக்க நிதி உதவியை இல்லாதொழிக்கக்கூடியதாக இருப்பதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
இந்தச் சட்ட மூலத்திலுள்ள அனைத்து விடயங்களிலும் உடன்பாடு இல்லாத போதும் அதன் முழுமையான உள்ளடக்கம் குறித்தே தான் அதற்கு ஆதரவு வழங்கியுள்ளதாகவும் சட்ட மூலத்தில் வெளிநாட்டு பயங்கரவாத சந்தேக நபர்களை கையாள்வது தொடர்பான பகுதிகள் குறித்து தான் கவலையடைந்துள்ளதாகவும் ஒபாமா குறிப்பிட்டுள்ளார்.
ஹவாய்க்கு விடுமுறையைக் கழிக்க சென்ற நிலையிலேயே பராக் ஒபாமா இந்த சட்ட மூலத்தில் கைச்சாத் திட்டுள்ளார். ஈரானிய அணுசக்தி விவகாரம் குறித்து பதற்ற நிலை அதிகரித்துள்ள நிலையிலேயே மேற்படி பாதுகாப்பு சட்ட மூலத்திலான கைச்சாத்திடல் இடம்பெற்றுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. ஈரானிய நிதித் துறைக்கு எதிராக அண்மையில் அமெரிக்கா தடையை விதித்திருந’தமையும் குறிப்பிடத்தக்கது.
0 Responses to ஈரானுக்கு எதிராக புதிய தடை கைச்சாத்திட்டார் ஒபாமா