சீமான் நடித்த ’மகிழ்ச்சி’ படத்தை இயக்கியவர் கௌதமன். இவர் இந்தப் படத்தை இயக்குவதற்கு முன்பு "சினிமாவுக்குப் போன சித்தாளு" என்ற ஜெயகாந்தனின் குறுநாவலை டெலிஃபிலிமாக எடுத்தவர்.
இந்த முயற்சிகளின் மூலம் வெளிச்சத்துக்கு வராத வ.கௌதமன் மக்கள் தொலைகாட்சியில் கடந்த 5 ஆண்டுகளாக ஒளிபரப்பாகி வரும் "சந்தணக்காடு" மெகா தொலைகாட்சித் தொடரின் மூலம் புகழ் பெற்றார். சந்தண வீரப்பனின் வாழ்க்கையை இந்தத் தொடரில் அவர் மிகநேர்மையாகவும் துணிச்சலாகவும், காட்சிபடுத்தி வந்தார். தொலைக்காட்சிக்கு முன் தணிக்கை இல்லாத காரணத்தால் பல உண்மைகளை மறைக்காமல் இந்த சந்தணக்காடு தொடர் ஒளிபரப்பானது.
இந்நிலையில் ஈழமக்களின் விடுதலையில் அக்ககறை கொண்ட உணர்வாளராக, இவர் மக்கள் போராட்ட மேடைகளிலும் பிரபமாகி வருகிறார். இதனால் இவரிடம், "சந்தணக்காடு தொடரைப் போலவே, ஈழவிடுதலை வரலாற்றை வன்னிக்காடு என்ற தலைப்பில் ஏன் மக்கள் தொலைகாட்சிக்கு தயாரிக்கக் கூடாது" என்று நண்பர் கேட்க, ஏற்கனவே உணர்வாளராக இருக்கும் கௌதமன் இதை கற்பூரமாக பிடித்துக் கொண்டு விட்டார்.
தற்போது "வன்னிக்காடு" மெகா தொலக்காட்சித் தொடருக்கான திரைக்கதை மும்முரமாக எழுதிவருகிறேன். விரைவில் மக்கள் தொலக்காட்சி வன்னிகாட்டை தொடங்க இருகிறோம். இது மாபெரும் மக்கள் வரலாறாக இருக்கும். கோவை சத்தியமங்கலம் பகுதியையே வன்னிக்காடு தொடருக்கும் கதைக்களமாக பயன்படுத்த இருகிறேன். கொழும்பு, மற்றும் யாழ் நகர்களை கோவா மற்றும் மங்களூர் பாண்டிச்சேரி ஆகிய நகரங்களை வைத்து மேச் செய்ய இருகிறோம். திருநெல்வேலி மாவட்டம் கிளிநொச்சிக்கு அப்படியே பொருந்தும். வன்னிக்காடு தமிழனின் வீரவரலாறாக இருக்கும். ஈழத்தை விரைவில் தமிழினம் வெல்லும்” என உணர்ச்சி பொங்க நம்மிடம் கூறினார் கௌதமன்.
தமிழ் மீடியா
தாயகத்திலும் புலம் பெயர்ந்தும் உள்ள தமிழர்கள் செய்யவேண்டியது...
போராட்டம் என்கின்ற பெயரால் தமிழ் மக்களது பொருளாதாரத்தையும் இயல்பு வாழ்வையும் சீர் குலைத்து ஒரு லட்சத்திற்கும் மேலான உயிர்களைப் பலி கொடுத்தும் ஒர் உறுதியான கொள்கையில்லாமல் எமது மக்களுக்கு கிடைக்திருக்க கூடிய சகல வாய்ப்புகளையும் இல்லாதொழித்து ஒர் அர்த்தமற்ற யுத்தத்தை புரிந்து அதில் தோல்விகளையும் தழுவிய புலிகள் ஒட்டுமொத்த தமிழினத்தையும் இலங்கைத் தீவில் இருந்து அப்புறப்படுத்த கங்கணம் கட்டி நிற்கின்றனர். எனவே புலிகளை எம்மில் இருந்து ஓரங்கட்ட வேண்டியது எமது இன்றைய காலத்தின் கட்டாயமாக இருக்கின்றது. நிச்சயமாக வெல்ல முடியாத ஓர் போருக்காக எமது முழு பொருளாதார வளத்தையும் எமது சமுதாயத்தின் தாங்கு தூண்களான எம் இளம் சமுதாயத்தையும் அநியாயமாக பலி கொடுத்தனர்.
இந்நிலையில் சிறிலங்கா அரசு புலிகளுக்கு பேச்சுவார்த்தை மேசையில் வழங்கியிருந்த சமஅந்தஸ்து என்ற நிலையில் இருந்து விலகி பயங்கர வாதம் ஒழிந்த பின்பு தான் அடுத்த கட்ட பேச்சு வார்த்தை என்கின்ற நிலைக்கு வந்துள்ளதுடன் வன்னியை புலிகளின் பிடியில் இருந்து மீட்பதற்கான போர் அதன் இலக்கை அடையும் வரை புலிகளுடன் பேச்சுக்கே இடமில்லை என்கின்ற நிலைக்கு வந்துள்ளனர். இதற்கான காரணம் கடந்த போர்நிறுத்த ஒப்பந்தத்தை புலிகள் பயன்படுத்திய விதம் பயங்கரவாதத்திற்கு வலு சேர்ப்பதாகவே அமைந்திருந்தது. அதன் விளைவே இன்றைய பாரிய தோல்வி...
யுத்த நிறுத்த ஒப்பந்தம் நடைமுறையில் இருந்த காலத்தில் சிறிலங்காவில் அருகருகே சிறிலங்கா இராணுவ முகாம்களும் புலிகளின் அரசியல் பணிமனைகளும் காணப்பட்டன. அங்கு விரைந்திருந்த சர்வதேச பத்திரிகையாளர்கள் மக்களின் மனநிலைக் கருத்து கணிப்பொன்றை நடாத்தியிருந்தனர். தமது கருத்துக்களை தெரிவித்திருந்த மக்கள் துப்பாக்கி வேட்டு சத்தங்கள் அற்ற இந்த சுழ்நிலையில் வாழ அனுமதித்தால் அதுவே போதுமானதாகும் இந்நிலையில் நாம் மிகவும் சந்தோசமாக உள்ளோம் என்று தான் தெருவித்திருந்தனர். அன்றைய தமிழ் மக்கள்.
மக்கள் இவ்வாறான ஒர் சுதந்திர காற்றை சுவாசித்து பழகினால் அவர்கள் எந்த காலகட்டத்திலும் தமது பயங்கரவாதத்தை அனுமதிக்க மாட்டார்கள் என மிரண்ட புலிகள் தமது வன்முறைக் கலாச்சாரத்தை கட்டவிழ்த்து போரை வலிந்து இழுத்து கொண்டுள்ளனர். ஆனால் இந்த போரிலே உயிர் இழக்க போவது அல்லது நேர்ந்து வன்னியில் இருந்து பலவந்தமாக கொண்டு வந்து போர்களத்தில் குவிக்கப்படும் இளம் பிஞ்சுகளே.
எனவே பயங்கரவாதிகளுக்கு ஆதரவுகொடுப்பதை தமிழர்கள் இந்த பரிதாப நிலையை நிறுத்துவதானால் புலிகளுக்கு ஆதரவு வழங்குகின்ற அனைத்து தமிழர்களும் அவர்களது உதவிகளை நிறுத்தி புலிகளை தனிமைப் படுத்துவதன் மூலம் அவர்களை வன்முறைகளில் இருந்து வெளியே கொண்டு வந்து தமிழ் மக்களின் சாத்தியமான அரசியலில் பங்கெடுக்க வற்புறுத்த முடியும்.ஆக்கம் தேநீர்