சமீபத்தில் புனேயை சேர்ந்த பித்வ் என்ற மாணவர் இங்கிலாந்தில் உள்ள மான் செஸ்டரில் மர்ம நபரால் சுட்டுக்கொல்லப்பட்டார். இந்த நிலையில் கனடாவிலும் ஒரு மாணவர் சுட்டுக்கொல்லப்பட்ட தகவல் தற்போது வெளியாகி உள்ளது.
அவரது பெயர் அலோக் குப்தா (27) இந்தியாவை சேர்ந்த இவர் கனடாவில் உள்ள வாண்டெலன்” பல் கலைக்கழகத்தில் “எம்.பி.ஏ.” படித்து வந்தார். சுர்ரே நகரில் உள்ள ஒரு சூப்பர் மார்க்கெட்டில் பகுதி நேர விற்பனையாளராக பணி புரிந்து வந்தார். கிறிஸ்துமஸ் பண்டிகை அன்று வியாபாரம் சூடு பிடித்து இருந்தது.
கடை உரிமையாளருடன் சேர்ந்து குப்தா கடையில் பணிபுரிந்து கொண்டிருந்தார். மதியம் அங்கு வந்த மர்ம நபர் குப்தாவை சரமாரியாக துப்பாக்கியால் சுட்டான். ரத்த வெள்ளத்தில் மயங்கி விழுந்த அவரை ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் வழியிலேயே அவர் இறந்து விட்டார். இதுகுறித்து வழக்குப் பதிவு செய்து போலீசார் விசாரித்து வருகின்றனர். சுட்டுக் கொல்லப்பட்ட தகவல் அவரது குடும்பத்தினருக்கு தெரிவிக்கப்பட்டது.
இதனால் அவர்கள் கடும் அதிர்ச்சி அடைந்தனர். பிரேத பரிசோதனைக்கு பிறகு அலோக்குப்தா உடல் இந்தியாவுக்கு கொண்டுவரப்படுகிறது.
0 Responses to கனடாவில் இந்திய மாணவர் சுட்டுக்கொலை