சசிகலாவின் அண்ணி இளவரசியின் சகோதரர் அண்ணாதுரை, மன்னார்குடி வட்டம் கோட்டூர் ஒன்றியத்தின் செயலாளராகவும், சேர்மனாகவும் பதவி வகித்து வந்தார். கடந்த வாரத்தில் ஒன்றிய செயலாளர்பதவியை ஜெயலலிதா பறித்தார்.
இப்பதவி பறிபோனதால் தொடர்ந்து ஒன்றிய சேர்மன் பதவியில் பணபுரிய விருப்பம் இல்லாததாலும், ஒன்றிய சேர்மன் பொறுப்பில் இருந்தும்,
அதிமுக அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்தும், தன்னை விடுவித்து கொள்வதாக திருவாரூர் மாவட்ட ஆட்சித்தலைவர் முனியநாதன் மற்றூம் முதல்வர் ஜெயலலிதா ஆகியோருக்கு கடிதம் எழுதியுள்ளார்.
சொந்தப்பணி காரணமாக விடுவித்துக்கொள்வதாக் அவர் தெரிவித்துள்ளார்.
0 Responses to இளவரசியின் அண்ணன் அதிமுகவில் இருந்து ராஜினாமா