இலங்கை சுதந்திரமடைந்த பின்னர், சிங்கள இனவாதம் தமிழருக்கு எதிரான வியூகத்தில் இன்று முதல் தடவையாக ஜெனீவாவில் தோல்வி கண்டுள்ளது.
இது பெரிய வெற்றியல்ல என்று சிலர் கதையைத் திரித்துவிடலாம். இதனால் சிங்கள அரசுக்கு பெரும் பாதிப்புக்கள் ஏற்படாது என்றும் கூறலாம். ஆனால் இங்கு அவையல்ல முக்கியம், இனவாதம் முதற்தடைவையாக தோற்கடிக்கப்பட்டுள்ளது, இதுதான் முக்கியம்.
சர்வதேச சமுதாயத்தை ஏமாற்றி புலிகளுக்கு பயங்கரவாதப் பட்டம் கட்டியபோதும், இந்திய ஆதரவுடன் போரை நடாத்தி உலக சமுதாயத்தை ஏமாற்றி பெரும் கொலைகளை செய்ததுவரை சிறீலங்கா பக்கமே வெற்றிக்காற்று வீசியது.
GTV மாலைநேர செய்தி 22-03-2012
ஆனால்…
இன்று முதல் தடவையாக உலக அரங்கில் தர்மம் வெற்றி பெற்றிருக்கிறது. கண்ணீர் சிந்திய, தன்மானமுள்ள ஒவ்வொரு ஈழத் தமிழனுக்கும் கிடைத்த வெற்றியாகவே இதைக் கருத வேண்டும்.
இந்த வெற்றியை கொண்டாடக்கூடாது என்பதற்காக நேற்று முன்தினமே அனைத்து விழாக்களையும் வடபகுதி ஆளுநர் தடை செய்துள்ளார்.
யாழ்ப்பாணத்தில் பெருந்தொகை படையினர் இறக்கப்பட்டுள்ளனர்..
இந்த வெற்றி தமிழ் மக்களுக்கு ஒரு நம்பிக்கை தரக்கூடாது என்பதில் அரசுக்கு எவ்வளவு அக்கறை. நாம் 2500 வருட பழமையான வரலாறு கொண்டவர்கள் எமக்கு மற்றவன் மனித உரிமை சொல்லித்தர வேண்டியதில்லை என்று மகிந்தராஜபக்ஷ கூறியிருக்கிறார்.
தமிழருக்கு பயங்கரவாதி பட்டம் கட்டியபோது இனிப்புக் கொடுத்த 2500 வருட சிங்கள வரலாற்றுக்கு இப்போது எனக்கு எவனும் புத்தி சொல்ல வேண்டியதில்லை என்று சலித்துள்ளது.
எத்தனை பேரை ஜெனீவா அனுப்பு, எத்தனை நாடுகளுக்கு ஓடி முடியாத கட்டத்தில் சீச்சீ இந்தப் பழம் புளிக்கும் என்றுள்ளது இனவாதம்.
இதில் வேடிக்கை என்னவென்றால் இந்தியாவும் கடந்த 64 வருட வரலாற்றில் முதல் தடவையாக சிறீலங்காவுக்கு எதிராக வாக்களித்திருக்கிறது. உள்நாட்டில் அரசியல் செய்ய முடியாமல் வரும் என்ற நெருக்குவாரத்தால் வந்த மாற்றம்.
இருப்பினும் இந்தியாவின் மாற்றம் வரவேற்கப்பட வேண்டியது, இது தொடர வேண்டும். இந்திய நடுவண் அரசு தமிழ் மக்களின் நண்பனாக மாறினால் மட்டுமே காங்கிரஸ் மறுபடியும் ஆட்சிக்கட்டில் ஏறலாம், இது உண்மை.
இத்தனைக்குப் பிறகும் இந்தியாவும் சீனாவும் சேர்ந்து சிங்களவருக்கு மட்டும் ஆதரவளித்தால் அது அரசியல் அபசுரம்.
சிங்களவருக்கு ஆதரவளித்த சீனாவே இனி தமது நண்பர் என்கிறது சிங்கள இனவாதம். இந்தியாவுக்கு எதிராக சிங்கள இனவாதம் நேற்றே திசை திரும்பிவிட்டது. தாமதிக்க இனி யாதொரு முகாந்திரமும் இல்லை.. இந்தியா இனி தமிழ் மக்களுக்காக வெளிப்படையாக களம் இறங்க வேண்டிய நேரம் வந்துள்ளது.
இந்திய நடுவண் அரசு 2009 மே 17க்கு பின் முதல் தடவையாக ஈழத் தமிழனின் பாராட்டுக்களை இன்று பெறுகிறது.
அதேவேளை..
தமிழ் மக்கள் மீது இன்னொரு யூலைக்கலவரம் நடக்காமல் தடுக்க வேண்டிய பொறுப்பு இந்தியாவுக்கு இருக்கிறது.
சிறீலங்கா பாராளுமன்றத்தின் முன்னாள் இனவாதிகள் குவிந்துவிட்டதாக சற்று முன் செய்தி கிடைக்கிறது..
தமிழர்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
மேலும்…
இந்தியாவை திசை திருப்பப் பாடுபட்ட தமிழக முதல்வர் செல்வி ஜெயலலிதா முதலாவது பாரட்டுக்குரியவர். கிளரி கிளின்டனுக்கு அவர் கொடுத்த அழுத்தம் இன்று ஜெனீவாவில் பிரதிபலித்துள்ளது. மொத்தத்தில் இந்த விடயத்தில் குரல் கொடுத்த அனைத்து தமிழகக் கட்சிகளும் பாராட்டுக்குரியனவையே.
கடந்த 64 வருட வராலாற்றில் முதல் தடவையாக தமிழனுக்கு ஆதரவாக பிரேரணை கொண்டுவந்து, அதற்காக பாடுபட்டு வெற்றிபெறச் செய்த அமெரிக்க மக்களுக்கும், அதிபர் பராக் ஒபாமாவுக்கும் தமிழ் மக்களின் இதயம் கனிந்த பாராட்டுக்கள்.
இனி ஈழத்தில் நிலமை மாறப்போகிறது…
புதிய நம்பிக்கைகள் பிறக்கின்றன..
தீர்மானத்திற்கு ஆதரவாக வாக்களித்த நாடுகள்:-
01.ஆஸ்திரேலியா
02.பெல்ஜியம்
03.பெனின்
04.கேமரூன்
05.சிலி
06.கோஸ்டாரிக்கா
07.செக் குடியரசு
08.கோத்தமாலா
09.ஹங்கேரி
10.இந்தியா
11.இத்தாலி
12.லிபியா
13.மொரிடஸ்
14.மெக்சிகோ
15.நைஜீரியா
16.நார்வே
17.பெரு
18.போலந்து
19.மோல்டோவா
20.ரோமானியா
21.ஸ்பெயின்
22.சுவிட்சர்லாந்து
23. அமெரிக்கா
24.உருகுவே
இலங்கைக்கு ஆதரவாக வாக்களித்த நாடுகள்:-
01.வங்கதேசம்
02.சீனா
03.காங்கோ
04.கியூபா
05.ஈக்வேடர்
06.இந்தோனேசியா
07.குவைத்
08.மாலத்தீவு
09.மைவுரிடானியா
10.பிலிப்பைன்ஸ்
11.கத்தார்
12.ரஷ்யா
13.சவுதி அரேபியா
14.தாய்லாந்து
15.உகாண்டா
வாக்களிக்காத நாடுகள்:
01.அங்கோலா
02.போர்சுவானா
03.பேர்கினா பசோ
04.ஜிபூடி
05.ஜோர்டான்
06.கிர்கிஸ்தான்
07.மலேசியா
08.செனகல்
அலைகள்.
A great first step in the journey of TAMIL EELAM
intha padaththil munnukku nirpavar kulla podda musleem.inak kalavaram onru thoondappadaal kollai,karpalippu nikalththa thayaar aaka ullaar.sinkalavarukkum thamilarukkum ulla pirachchinaiyai oothi perisu aakkiyathu ivarkal thaan.pulikalvenru irunthaal ithey kai puli kodi pidiththu aaddum.vada pakuthiyil ippadi sinka kodi pidiththu aaddiyathaal thaan veli erram nadai perrathu.thamilarai yaarum kakka maddaar.meendum oru padai secret aaka uruvaakkam pera vendum.appa thaan ippadiyaana kodiyavaridam irunthu namathu makkal kaakkapaduvar.entha theermanam niraiverinaalum inthiyaa thamilarukku ethiraana nilaiyai kai vidaathu.