Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் மின்வெட்டு தற்போதைய 2 மணி நேரத்தில் இருந்து இனி 4 மணி நேரமாக அதிகரிக்க உள்ளதாகவும், இந்த புதிய மின்வெட்டு நேரம் வரும் 01.04..2012 முதல் அமலுக்கு வரும் என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

தமிழகத்தில் சென்னை மற்றும் புறநகர் நீங்கலாக பிற பகுதிகளில் தினமும் 8 மணி நேரத்திற்கு மேல் மின்வெட்டு நடைமுறையில் உள்ளது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் தினமும் 2 மணி நேரம் இருந்து வருகிறது.

தற்போது தினமும் 12 ஆயிரம் மெகாவாட் மின்சாரம் தேவைப்படுகிறது. ஆனால் உற்பத்தி வெறும் 7 ஆயிரத்து 500 மெகாவாட் என்ற அளவில்தான் உள்ளது. இதனால் தினமும் 4 ஆயிரத்து 500 மெகாவாட் வரை பற்றாக்குறை நிலவுவதால் மின்வெட்டு அதிகரித்துக்கொண்டே போகிறது. இனி உச்சக்கட்ட கோடைகாலம் வர உள்ள நிலையில் மின் தேவை தினமும் 12 ஆயிரம் மெகாவாட்டிற்கு மேல் அதிகரிக்கும். அப்போது பற்றாக்குறை 5 ஆயிரம் மெகாவாட்டிற்கு மேல் செல்லும் என மின்வாரியம்கணித்துள்ளது.

இந்த பற்றாக்குறையை சமாளிக்க சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இனி மின்வெட்டை 4 மணி நேரமாக உயர்த்த திட்டமிடப்பட்டுள்ளது.

இதுகுறித்து மின்வாரிய அதிகாரிகள் அரசுக்கு பரிந்துரை செய்ய பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். தமிழக அரசு ஒப்புதல் அளித்ததும் கூடுதல் மின்வெட்டு வரும் 01.04..2012 முதல் அமலுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

0 Responses to சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் மின்வெட்டு 2 மணி நேரத்தில் இருந்து 4 மணி நேரமாக அதிகரிப்பு?

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com