Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

தமிழகத்தில் தங்கியுள்ள இலங்கைத் தமிழ் அகதிகளுக்கு காப்பீட்டுத் திட்டத்தை விரிவுபடுத்தவும், அகதிகள் முகாம்களில் உள்ள அடிப்படை வசதிகளை மேம்படுத்தவும் தமிழக முதல்வர் 25 கோடி ரூபாயை ஒதுக்கீடு செய்துள்ளதாக அரசின் செய்திக் குறிப்பு தெரிவிக்கிறது.

ஏற்கனவே தமிழகத்தில் ஏழை மக்களுக்காக உள்ள மருத்துவக் காப்பீட்டின் கீழ் தற்போது இலங்கை அகதிகள் கொண்டுவரப்பட்டுள்ளனர்.

அகதிகள் முகாம்களில் குடிநீர் விநியோகத்தை மேம்படுத்த 4 கோடியே 33 லட்சம் ரூபாயையும்,

அகதிகள் தங்கியிருக்கும் வீடுகளை மேம்படுத்த 20 கோடியே 66 லட்சம் ரூபாயையும்,

அகதிகளைக் கொண்ட மகளிர் சுய உதவிக் குழுக்களுக்காக 41 லட்சத்து 60 ஆயிரம் ரூபாயையும்,

அகதி மாணவர் கல்வி ஊக்கத் தொகைக்காக 21 லட்சம் ரூபாயையும்

முதல்வர் ஜெயலலிதா ஒதுக்கியுள்ளதாக தமிழக அரசின் செய்திக் குறிப்புத் தெரிவிக்கிறது.

இலங்கை அகதிகள் தங்க வைக்கப்பட்டுள்ள முகாம்களில் குடிநீர், கழிப்பறை மற்றும் தங்குமிட வசதிகள் மிக மோசமாக இருப்பதாக பல ஆண்டுகளாகப் புகார் கூறப்பட்டுவரும் சூழலில் இந்த அறிவிப்பு வந்துள்ளது.

ஐக்கிய நாடுகளின் அகதிகளுக்கான உயர்ஸ்தானிகர் அலுவலகம் வெளியிட்டுள்ள விபரங்களின்படி தமிழகத்தில் உள்ள 112 அகதிகள் முகாம்களில் 70 ஆயிரம் இலங்கைத் தமிழர்கள் வாழ்கின்றனர்.

இது தவிர முகாம்களுக்கு வெளியே 32 ஆயிரம் பேர் வாழ்கின்றனர். இதில் ஒரு சிறிய தொகுதியினர் போர் முடிந்த பின்னர் இலங்கை திரும்பியுள்ளனர்.

0 Responses to ஈழத் தமிழ் அகதிகளுக்காக தமிழக முதல்வர் 25 கோடி ரூபாய் ஒதுக்கீடு

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com